முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
அணங்குடை வானோ14 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

அணங்குடை வானோ

58நேரிசை ஆசிரியப்பா✓
அணங்குடை வானோ ரரனிடஞ் சென்று
வணங்கியே குறைசொலி வாழ்த்தி நிற்கையில்
எம்முடை யைய னிமையவர் முன்னர்
ஐமுகத் தோட தோமுகங் காட்ட
மூவிரு முகத்தினு மூவிரு பொறிகள்
யாவருந் துண்ணெனத் தாவிப் பரவலுந்
செந்தீக் கடவுளும் செழுநீர்க் கங்கையும்
அந்ததீப் பொறிகளை யவன்பணி யாலே
சரவணப் பொய்கையிற் பெருமையோ டுய்க்க
சரவண பவனெனு மொருபெயர் பூண்டோய்
விண்செலு மையருக் கேந்திய சூதமும்
திண்ணிய உக்கஞ் சேர்த்திய வனசமும்
அங்குச முளரியு மகனிடைக் கமலமும்
பங்கமில் சத்தியைப் பற்றிரு நளினமும்
வள்ளியின் மலரடி வருடிய சலசமும்
வெள்ளிய மரைவரு விமலனை சுரர்களும்
பயங்கொள கொட்டிய பங்கே ருகமும்
அண்டரைச் சிறைவிடு முண்டக மலரும்
திருவடி காட்டுமோர் திருமா லுந்தியும்
அடியரை யஞ்சே லெனுமர விந்தமும்
நொடிதனி லசுரரை நூறுபங் கயமும்
கவினொடு விளங்குவுன் காட்சியைக் கண்டவர்
சீரிய தவமுறுஞ் செல்வராய்ப்
பாரினிற் பவப்பிணி யற்றவர் தாமே.
59எழுசீராசிரிய விருத்தம்✓
தாமத குணத்தா லைம்பொறி யடக்கித்
தவமது புரிவதற் கில்லேன்
பாமர னந்தோ நினையான் நிதமும்
பத்தியால் நினையுமா றருளாய்
தாமரை யினமு மரியொடு கரியுந்
தனித்தனி யுழற்பரங் குன்றில்
மாமறை யேத்தி வணங்குறும் பொருளே
வானவர்க் கமுதமா மணியே.
60சந்த விருத்தம்✓
மணிக்கை யோடிரு மயிலியல் மாதரை
மணத்த சேவகர் முனிவர்கள் தேவர்கள்
வணங்க வேவரு யழகுடை வேலிறை யெனுநாமன்
துணித்த வோர்பிறை யணிசடை யார்மகன்
சுரர்க்கு லாதிப னரசினைக் காத்தருள்
துடிக்கு நாயக னெனும்படி யாடிய முருகோனே
பிணித்த வாணவ மலமதி லேசுழல்
யெனக்கு நீயொரு ஐயனல வோயின
யுனக்கு நானொரு பிள்ளையல வோதய விலையோதான்
கணிச்சி யேந்திய நமன்விடு தூதரை
கடிந்து பேசிடு நினதடி யாருடன்
கலந்து கூடிடு மொருதனி வாழ்வினைத் தருவாயே.
61நேரிசை வெண்பா✓
தருமன்னை தாதா தரணிதல மில்லம்
அருநிதியும் பேர்கதியு மாமே-பொருவில்
தவளவண் ணத்தான் தலைவணங்கும் போரூர்
பவளவண் ணத்தான் பதம்.
62கட்டளைக் கலித்துறை✓
பத்தர்கட் கண்டு பரவச முற்று பணிந்தவர்தங்
குத்திர மெய்யைக் கடிந்தடி சேரபற் குன்றுதொறும்
சித்திர மஞ்ஞை மிசைதிக ழெம்முடை சேவகனார்
அத்திர மாய்கில ரென்னே சிலரிவ் வவனியிலே.