முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
நரனாய்ப் பிறந்து16 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

நரனாய்ப் பிறந்து

68நேரிசை ஆசிரியப்பா✓
நரனாய்ப் பிறந்து நானிலத் தின்கண்
அரன்கழற் பணியு மன்பர் குழாத்துள்
ஒருவனா யிருந்து வுவந்து வாழ்தல்
அருமையி லரிதே; அதனினு மரிது
மறைப்பொரு ளறியா மலர்மிசை யேகினாற்
கிறைமையைக் காட்டி யிமையவர் காத்த
அருள்பொழி வதனத் தண்ண
லிருசரண் போற்றி இறைஞ்சுதல் தானே.
69எண்சீராசிரிய விருத்தம்✓
தானாகி நின்றவுனை வாழ்த்து வேனைச்
சாருமோ தொல்லையும் மலங்கள் தாமுங்
கோனாகி நின்றொளிரு மணியே யுன்றன்
குரைகழற்கா லடைந்தேனைத் தொடுமோ சன்மம்
வானாகி மண்ணாாகி யனில மாகி
வனமாகி தீயாகி தொண்டர் கட்குத்
தேனாகி யின்பமா யினிக்குஞ் சோதி
திகழ்தணிகை வேலாவெந் தேவ தேவே.
70சந்த விருத்தம்✓
தேனைக் காலுங் குழலார்தஞ் சேவைக் காளா யிருப்பேற்கு
ஆனைக் காத்த திருமாலி னாசைக் கேற்ற மருகோனே
வானைச் சீறுஞ் சிகியீது வாரித் தோன்றும் ரவிபோல
மானைப் போன்ற அனையோடு மாசிற் காட்சி தருவாயே.
71நேரிசை வெண்பா✓
ஏந்துமுலை யாராசை இப்புவியில் மண்ணாசை
காந்துபொ னாசைக் கருதாமல்-பூந்துழாய்க்
கண்ணிப் பரந்தாமன் காதலிக்குங் கந்தன்தாள்
எண்ணிப் பரவல்நா மென்று.
72கட்டளைக் கலித்துறை✓
என்று தொலைப்பே னறிவழித் தாட்டுமென் கன்மமதை
அன்றல வோவுன தாட்கம லத்தை யடைகுவன்யான்
மன்றுதோ றாடிய வள்ளலு மாயு மகிழ்ந்தருள
குன்றுதோ றாடலை நாடிய அன்பார் குணக்குன்றமே.