முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
மின்னிடை மாதர்4 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

மின்னிடை மாதர்

8நேரிசை ஆசிரியப்பா✓
மின்னிடை மாதர் வலமிட மிருக்க
பொன்னிற வொகரம் பொலிவொடு மருங்கே
பீலியைத் திறந்து சாமர மிரட்ட
நீலமும் வைரமும் நிறையொளி முத்தும்
பவளமுங் குயிற்றிய பன்மணி யாரம்
நவிலரு மொய்ம்புசே ருரத்திடை நால
நுண்மைய தாகிய உண்மைப் பொருளாம்
பதிபசு பாசப் பான்மையை யுணர்ந்து
அருளொளி பெற்ற திருவள் ளர்க்கு
ஆவியே அமுதே ஆறெழுத் தரசே
பாவி யேனைப் பற்றித் தொடர்ந்த
மும்மலத் திமிரினை முடித்தல்
நின்மலா உந்தன் நெறியது தானே.
9அறுசீராசிரிய விருத்தம்✓
தானம்புகழ் கல்வி தகைமை சேர்வேத மாறங்கந் தாவில்
மானம்பொறை செல்வ மாதியிற் றிகழுமாண் புடையா ரேனு
ஊனமில்கந் தனடிமலர் போற்று முத்தம ரல்லா ராயின்
நானிலத் திலவர் தங்கள் நலன்களெல்லாம் மடமைப் பாற்றே.
10சந்த விருத்தம்✓
மடமோங்கி தூயர் மிகவாழு ஞான
மணவீசுஞ் சோண கிரியில்
விடமோங்கு கண்ட ருமையோடு கூடி
விளையாடுஞ் சேயி னடியை
படமோங்கு பாந்த ளழல்வாயிற் றேரை
படுமின்னல் தன்னை யுடையீர்!
இடமோங்கு மிந்த புவிமீதி லுங்கள்
இடர்நீங்க சென்று தொழுமே.
11நேரிசை வெண்பா✓
செல்லுலவு வெற்பெல்லாஞ் சீரகமா யேற்றங்கண்
வில்லுமிழ வீற்றிருக்கும் வேலவனை-நல்லார்
சிவமொழியைச் செப்பித் தெரிசிப்பர் தங்கள்
பவமொழியச் சென்று பணிந்து.
12கட்டளைக் கலித்துறை✓
(நற்றாயிரங்கல்)
பணிவளை யத்து நுழைவதை யேய்க்கும் பரத்தையராம்
மணிவளை யத்தர் மனத்தினை நம்பி மதுரமொழி
பெணிவளை யத்த துறந்திடி லன்றே பிராணண்விட
துணிவளை யத்திற் கிடமிலை சண்முகத் தூமணியே.