முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
மல்லலம் பாங்கரில்7 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

மல்லலம் பாங்கரில்

23நேரிசை ஆசிரியப்பா✓
மல்லலம் பாங்கரில் நல்லியற் புன்னை
தடங்கரை புளினமேல் மடல்விரி தாழை
முடைநாற் றத்தைப் புடைக்க ணகற்ற
செந்திலம் பதியிற் சீர்பெற் றிலங்கும்
கந்தா வோருரை கழறுவன் கேண்மதி
தானவர் கடலையுந் தரங்கெறி கடலையும்
வானவர் புரப்பான் மாவடி வேலால்
நீறு செய்த நிகரிலாப் புகழோய்!
கூறு மடியேன் கொடிய பிறப்பாம்
அம்பரந் தன்னையு மழிக்க
எம்பிராற் றந்த இறைவநிற் கரிதே.
24அறுசீராசிரிய விருத்தம்✓
அரியின மிசையைப் பாட ஆமைத் தோளா ரேய்ப்ப
வரிசிறை மயிலி னீட்டம் வனப்பொடு நடனங் காட்ட
பரிவுட னிதுழி பொன்னைப் பாங்குடன் சொரியுஞ் சோலை
வரைதனி லமர்ந்து வாழும் வானவர் வணங்கும் வேளே.
25சந்த விருத்தம்✓
வேளை மானசிறு காளை யார்களமலி
வேலை சூழுமணி சோலையாய்
வாளை மீனமகிழ்ந் தோடி யாடிவரு
வாய மோரமிளிர் பூகத்தின்
பாளை மீதுஅரி தாவிக் காணுவிண்
லோக மீதுபடர் காவினைக்
கோளை நாளுநனி பேசி வாழுமெனை
கோலப் பீலிமிசை கொள்வையே.
26நேரிசை வெண்பா✓
கொள்ளே னுயர்வாகக் கோத்திரத்தில் சுற்றத்தை
உள்ளே னுனையன்றி யோர்தேவை-நள்ளேன்
குடியின்கண் நட்பைக் குமரேசா யார்க்கும்
படியின்கண் நீயலவோ பந்து.
27கட்டளைக் கலித்துறை✓
பந்தனை நீக்கிப் பவந்தனைத் தேய்த்துப் பரிவுடனே
எந்தனை யாளு மிமையவர் கோனையெ னின்னமுதக்
கந்தனை வேலனைக் கண்ணுண் மணியைக் கருத்தினுளே
வந்தனை செய்யாத மாக்களேன் வந்தாரிம் மண்ணுலகே.