முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
கள்ளவிழ் பொதும்பரில்6 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

கள்ளவிழ் பொதும்பரில்

18நேரிசை ஆசிரியப்பா✓
கள்ளவிழ் பொதும்பரில் புள்ளின மார்த்தல்
சிந்தையிற் றூய அந்தணர் கூட்டம்
முறையொடு சாற்றும் மறையொலி கடுக்கும்
ஆதியு மிந்தும் அந்தரத் தின்கண்
சோதிகால் மாளிகை துன்னிய தென்ன
நித்திலத் தொகுதியும் நேரின மணியும்
பத்தியி லிமைக்கும் பாங்குடை நியமமார்
பரங்குன் றின்கண் வாழும் பண்ணவ
திருப்புகழ்க் குருகும் திருச்செவி யுடையாய்
கருப்புக முடையேன் கழறுமிப் பைந்தமிழ்
அருத்தியி லறைந்ததன் றாயினும்
கருத்தினிற் கொள்வாய்க் கடவுளர்க் கரசே.
19அறுசீராசிரிய விருத்தம்✓
கடம்பொழி களிற தாகக் கானிடை தமையன் தன்னை
குடம்புரை குயத்தா ளஞ்ச கொடுவந்த வுந்தன் மாயம்
தடம்பொழில் நிறைந்த சோலைத் தண்ணறு முகத்தா யின்னும்
விடம்பயில் களத்தன் தாதை விண்டுவு மறிகில் லாரே.
20சந்த விருத்தம்✓
ஆரஞ் செறிதரு மார்ப னயோத்திக் கிறைவன் மகிழ்மருகன்
அடலொடு கிரியை வடிவுறு வேலா லலமர சாய்த்தோன்முன்
வீரம் மிகவளர் சூரருடல்தனை விசையொடு தாக்கியவர்
விரகினி லியற்றும் வெஞ்சமரத்து வியப்புற சயங்கொண்டோன்
நீரம் மிகுநிறை யோதஞ் சுவறிட நிதரறு அயில்விட்டோன்
நிருமல அரிவைய ரிருபுற மேற்கு மெங்கள் குருநாதன்
சீரஞ் சொரிகிற பயிலிட மாறும் நனிசென் றேத்தி யுங்கள்
சிரவந் தனிலவன் பெருமையைக் கேட்டுச் சிந்தனை செய்வீரே.
21நேரிசை வெண்பா✓
ஏத்தித் தொழுதிடுவோ மின்ப மலர்த்தொடையல்
சாத்திப் புகழ்ந்திடுவோம் தப்பாம-லோத்துகமழ்
தாரகத்தி னுட்பொருளைத் தற்பரனுக் கன்றிசைத்த
ஏரகத்தி னுட்பொருளை யின்று.
22கட்டளைக் கலித்துறை✓
இன்றுகந் தாக விருக்கு மடியேனின் இன்னடியிற்
சென்றுகந் தாவென்று பத்தியில் யான்வந்து செப்பிடினும்
நன்றுகந் தாயிலை நின்கோயின் வாயிலில் நாமுறவே
நின்றுகந் தாவி லரிமுதனோ ரேத்தும் நின்மலனே.