முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
கள்ளவிழ் கொன்றையுங்10 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

கள்ளவிழ் கொன்றையுங்

38நேரிசை ஆசிரியப்பா✓
கள்ளவிழ் கொன்றையுங் காயா வுஞ்செறி
முல்லையில் வாழும் நல்லிய லாயர்
குழலினைக் கேட்டு குலாவு மரிக்கு
அழகுடை மருகா அற்புதன் குமரா
போகிகட் கெட்டா யோகக் கொழுந்தே
புலியெலு சீயம் புகர்மா யேனம்
அலைதரு கானை அகமாக் கொண்டு
ஏனற் காத்த பானற் கண்ணியை
காமுக னொருவன் கடுப்பநீ
மாமணஞ் செய்ததோர் மால்வியப் பாமே.
39அறுசீராசிரிய விருத்தம்✓
பாமலியும் நின்புகழைத் தரணிதனிற் பாடாம லந்தோ வீணில்
காமுகரா யம்புவிழிக் கண்ணியரை வியந்தேகக் கால மெல்லாந்
தாமதராய்த் தொன்னூலைப் பழித்துவருந் தக்கோர்க்கோர் மருந்தி லையோ
சோமனிரு மூன்றென்ன வொளிவீசு மறுமுகத்துக் கந்த தூமணியே.
40சந்த விருத்தம்✓
ஏமன் பயப்பட சூர டர்த்தபின் ஏனற் புனத்தினிடை
வாம இடைச்சிறு பேதையெனப்படு மாதை யணைத்தபிரான்
காம மனத்துடை தீயகுணத்தவர் காணு வதற்கரியான்
தாம மளிப்பவன் மேவுதிருப்பதி சாமி மலைப்பதியே.
41நேரிசை வெண்பா✓
மலையைத் துளைப்பிக்கும் மாயைதனைக் கொல்லும்
அலையைக் கலக்கி யழிக்குஞ்-சிலைகொள்
பொருப்பரங் குன்றாமற் போற்றித் துதிக்குந்
திருப்பரங் குன்றார் திறல்.
42கட்டளைக் கலித்துறை✓
பருக்குஞ் சரத்தான் பயமற வாழ பரிகரிதேர்
முருக்குஞ் சரத்தா னவுணரைச் செற்று முலைமிசைமுத்
திருக்குஞ் சரத்தா னெழிலன மெய்தியெ னীনமனத்
திருக்குஞ் சரத்தா னழித்தான வன்கழற் சேர்ந்திருமே.