முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
இருண்ட கூந்தல்11 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

இருண்ட கூந்தல்

43நேரிசை ஆசிரியப்பா✓
இருண்ட கூந்தல் திரண்ட கொம்மைத்
தனமுடை மகளிரைத் தரணியில் வெஃகி
அனமென மயிலென அவரைப் புகழ்ந்து
புற்புதம் போன்றவிவ் வற்ப வுடலில்
ஆவலை வைத்து அலையுங் கொடிய
பாவியே னுன்னடி பற்றுநா ளுளதோ
இன்மரக் காவி லிளங்கிளிப் பிள்ளையும்
பன்மரக் கோட்டிற் பாடும் பூவையும்
வள்ளைக் குறங்கும் பள்ளநீர்ப் பழனத்
தகல்சோ ணாட்டில் முகிலினந் தவழும்
மாட மாளிகைக் கூட கோபுரம்
வெள்ளிமால் வரையெனும் புள்ளூர்க் குமரா
ஊறு பலசெய் தும்பரை வருத்திய
மாறுடைப் பகைவராம் மாயை மைந்தரை
எருவையுங் கொடியு மின்புறு மாறு
பொருவடி வேலாற் பொன்றிடச் செய்தோய்
ஐந்தரு நாத னன்போ டளித்த
செந்திரு வனைய தெய்வ யானையை
ஒப்புட னன்று உயர்மணம் புரிந்தோய்!
செப்பமும் பத்தியுஞ் சீர்சா லன்பும்
ஓதும் புகழு முருகெழு தோற்றமும்
ஏது மில்லா எந்தனை யாட்கொள
மயின்மிசை யதனில் வந்து
அயிலிமைக் கரத்தோ டருளுதற் கடனே.
44எழுசீராசிரிய விருத்தம்✓
கடம்பனே வேளே குறிஞ்சி வேந்தனே
யறுமீன் காதலனே யெங்கள்
மடந்தனை மாய்த்துபே ரின்ப வாழ்வினை
யளிப்பா யென்றுமர் வேண்ட
கிடங்குறு நாமக் கிளரொளி சோலை
கிரியினி லதிர்ப்பொடு தெய்வ
நடமிடு வண்ணச் சிகியிசைப் பொலியும்
நாதனே யருளு வாயே.
45சந்த விருத்தம்✓
அருமறை செப்பிய யயனுடை கந்தனி
லளியற கொட்டிய செவ்வேளே
இருணிறை சிந்தைய னெனவுனி நின்றிடல்
எழிலுடை யுன்றனக் கொவ்வாதே
கரும்பொரு கந்திகள் மிகுவளர் பண்ணையில்
கயலினந் துள்ளுறு புள்ளூரா
வெருவுடை வெவ்விய நரகிடை செல்லுவர்
விருப்பொடு வுந்தனை நள்ளாரே.
46நேரிசை வெண்பா✓
ஆரவட பூண்முலையா ரன்பினுக் கேயுருகி
பாரதனிற் சீரழியும் பாழ்மனமே-சோர்வில்
அமரகোট டம்பரவி யார்ப்பரிக்குந் தூய
குமரகোট டம்பரனைக் கூறு.
47கட்டளைக் கலித்துறை✓
கூறுகைக் கும்நாவு மான்ற அறிவுங் கொடுத்திருந்தும்
ஏறுகைக் கும்பெரு மானருட் கந்தா எழிலிநிகர்
வீறுகைக் குஞ்சரம் மாதூர் படவன்று வீரமுடன்
பாறுகைக் கும்படி செய்தவுன் சீரைப் பகர்ந்திலரே.