முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
மலைதொறு மரகத22 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

மலைதொறு மரகத

98நேரிசை ஆசிரியப்பா✓
மலைதொறு மரகத மயின்மிசை வருமொரு
கலையுணர் புலவனின் கழலடி
தலைமிசை கொளுபவர் தனுகொள விலையே.
99எழுசீராசிரிய விருத்தம்✓
இலங்கு மறுமுகத் தெழிலு மருள்பொழி
யீராறு விழிகளு மங்கை
துலங்குறு தோற்றமுந் தூயநல் லடியுங்
கண்டுகண் மகிழுநா ளுரையாய்
பலங்கொளும் வேலினைப் பண்டுபோல் விடாயெனப்
பயோததி யலைகளாங் கரத்தால்
பொலங்கழல் பணிந்து பொன்மணி கொழிக்குஞ்
செந்திலம் பதியுடை யோனே.
100சந்த விருத்தம்✓
ஓவிய ரங்கெழு தாவுரு கொண்டொளிர்
ஓரிரு தாயருடன்
தாவிய லஞ்சிறை மாமயில் தன்மிசை
தாரணி மீதொருநாள்
மேவிய நின்னுரு வேறினை யன்பனை
மீளலி லாநெறிசே
காவிய வம்புய வாவியி லன்றுதி
காரண பூரணனே.
வாழி விருத்தம்✓
அறுமுகம் வாழ்க அங்கண் பொழிதருங் கருணை வாழ்க
அறுபடை வீட்டுக் கந்தன் ஆறெழுத் தென்றும் வாழ்க
அறுதொழி லுடையோர் வாழ்க அருமறை நான்குங் வாழ்க
அறுபகைக் கடந்த அன்னோ னடியவர் வாழ்க மாதோ.