முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
உலக முவப்ப8 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

உலக முவப்ப

28நேரிசை ஆசிரியப்பா✓
உலக முவப்ப வலனேர் பென்றாற்குப்
பொலங்குழை யணிந்தவோ ரிலங்குசெவி யீந்தும்
முத்தைத் தருபத்தி யென்ற றைந்த
அரும்பெரும் புலவற் கொருசெவி யளித்தும்
திகட சக்கர செம்முக மென்ற
செஞ்சொல் முனிவற்கொ ரஞ்செவி யளித்தும்
கலிவெண் பாவைக் கழறிய பொருட்கும்
பொலிவிடை செவியி லொன்றனைக் கொடுத்தும்
அரனடி மறவா சரணா லயற்குச்
சுருதி மகிழுமோர் சுரோத்திர மீந்தும்
முருகா என்ற முருகுடை மகட்குன்
அருமைச் செவியி லொன்றனை யளித்தும்
செகத்தின் கண்ணே செந்தமிழ் பரப்பிய
அகத்திய முனிக்கோ ரஞ்செவி யீந்தும்
கிரியா சத்தியாம் கிளர்மணிப் பூணாள்
வழுத்துஞ் சொற்கோர் வான்செவி யருளியும்
இச்சா சத்தியா மின்ப வள்ளிக்கும்
விச்சையில் வல்லரும் விமல யோகரும்
போதரு மேத்துமோர்க் காதினை யீந்தும்
வள்ளலார் கனிந்த வண்கவிக் காக
உள்ள செவிகளி லொன்றனை யீந்தும்
மாலு மயனும் மனத்தி னிடத்தே
நாளு மேத்தி நாவினாற் புகழும்
அன்புடைச் சொற்கு னிருசெவி யளித்தும்
அறுபடை வீட்டிலு மமர்ந்த வேலோய்
சிறியேன் கவிக்குச் செவியிலை யென்று
அருளா திருத்த லழகிய தன்றே
அதனால்,
ஐம்முகத் தானரு ளாறு முகாவும்
பைம்முகத் தொளியைப் பார்ப்பான் வேண்டித்
தாயது வரவைத் தேடுஞ்
சேயதைப் போலத் தியங்கு கின்றேனே.
29பதின்நான்கு சீராசிரிய விருத்தம்✓
தியக்குறுமென் சிந்தைக்கு எட்டாத தெய்வமே
தேவர்சிறை மீட்ட கோவே
திருக்குநிறை வெவ்விய சூரர்களை மாய்த்திட்ட
சிங்கமே யினிமை சான்ற
பயத்துததி மீதுவளர் பச்சைமா வண்ணற்குப்
பார்தனி லுகந்த மருகா
பாகினினி னிக்கின்ற பழஞ்சொலாந் தமிழ்ச்சொலை
பண்பு சால்குறு முனிக்கு
நயத்தொடு அன்றீந்த செல்வமே தூய
நக்கீர ரிசைத்த நூற்கு
நற்புசை தன்னிலே வழுசெய்த மேலோரை
நாரமொடு காத்த ளித்தாய்
புயத்திலே மிளிர்கின்ற நீபமலர் மாலையாய்
புன்மையேன் சாற்று மிந்தப்
புனிதமது சற்றுமில் லாதவென் கவியையும்
பொறுத்தினிது அருள்பு ரிவையே.
30சந்த விருத்தம்✓
அருடந்து என்னைப் புவிவந்து ஆளி
னெவருன்னை நிந்தை யறைவார்
இருடந்து வோங்கு பொழிலெட்டி வானி
லிரிகின்ற எல்லை மறையா
தெருடந்த நல்ல பகற்போதைத் தேய்க்கு
மெழில்சிந்து மாண்ட குடியில்
முருடுந்து கோயி லெனிமேவு மந்த
முகமாறு கொண்ட பொருளே.
31நேரிசை வெண்பா✓
கொண்டல்வண் ணற்படுக்குங் கோளரவி னாவல்லால்
பண்டைவினை யேன்சொல் பகருமோ-தொண்டர்
கருத்தணிகை வேண்டிக் கனிவுடனே வாழ்த்துந்
திருத்தணிகை வேலன்றன் சீர்.
32கட்டளைக் கலித்துறை✓
சீரலை வாயே ரகங்குன்று தோறாடல் செல்வகிரி
காரலைக் குஞ்சோலை வேளூர் தணிகைக் கடம்பன்றுறை
பாரனைத் தும்புகழ் வேங்கடந் தில்லைப் பழனிமலை
சாரலைக் கொண்டுள்ள செங்கோடு வேலற்குத் தானங்களே.