முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
பூவார் தடமல்கு2 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

பூவார் தடமல்கு

1நேரிசை வெண்பா✓
பூவார் தடமல்கு போற்றுதிரு வேரகத்தின்
மாவாழ் நெடியோற்கு மால்மருகன்-மேவார்
அவந்திருப்பா னாயேனை ஆதரிக்க வெண்ணி
உவந்திருப்பா னெந்த னுளத்து.
2கட்டளைக் கலித்துறை✓
துணிகொண்ட திங்களுங் கங்கையும் வேணியிற் சூடிறைக்கு
அணிகொண்ட தெய்வப் பொருளாகி யோரயி லாயுதத்தால்
திணிகொண்ட சூரருங் கண்ட வனற்பதச் சீர்பரவார்
பணிகொண்ட தேரையிற் றுன்படை வாரிந்தப் பார்தனிலே.