முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
சண்முக னாசான்5 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

சண்முக னாசான்

13நேரிசை ஆசிரியப்பா✓
சண்முக னாசான் சாமி மலையன்
சிகிவா கனத்தோன் சீகண் டன்சுதன்
சுடர்விடு வேலான் சூரரை யட்டவன்
செக்க ருடுக்கையன் சேவற் கொடியோன்
சைய மமர்ந்தவன் சகல முணர்ந்தவன்
சொற்பொருள் வடிவன் சோதிவீட் டிறைவன்
சௌரி மருகன் சடாக்கரப் பொருளன்
வெற்பரங் கன்னியை வேட்ட
பொற்பன திணையடி போற்றுவம் யாமே.
14அறுசீராசிரிய விருத்தம்✓
அடியார் பவப்பிணிக் கோரரு மருந்தேயன் பேயருட் கடலே
வடியாத வாருணத் தழுந்தி வாடுமிவ் வேழை யேனுக்கு
முடியாறு நாலுங் கொண்ட அரக்கனை முருக்கிய மூர்த்தியாம்
நெடியோன் மருகா நீள்விசும் பரசே அருளு வாயினியே.
15சந்த விருத்தம்✓
இனிமையொ டுரைதரு மிளஞ்சுக மெனும்படி யிருமாதர்
பனிமதி யிரண்டொளிர் வதுயென் யிருபுடை பரிவோடே
நனியிருந் தழகுசெய் தகந்தொறு மமர்ந்தருள் முருகோனே
கனிவொடு துதிசெயு மடியனுக் கதிதனைத் தருவாயே.
16நேரிசை வெண்பா✓
தருவாகி நின்றுயர்ந்த தானவனைக் கண்டு
செருவா யதனிற் செகுத்த-பொருவேல்
பழநிமலை யானைப் பணியுடையார் செல்வப்
பழநிமலை யானைப் பணி.
17கட்டளைக் கலித்துறை✓
மலையானை வேலனைப் போரிடை தன்னை வணங்கினரை
மலையானை மான்தரு வள்ளிக் குகந்தானை வான்புரையும்
மலையானைச் சீய மலையுங்கோட் டானை மனந்தளரா
மலையானை வாரிடத் திலையா மரண துன்பங்களே.