முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
இல்லற மேவியும்12 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

இல்லற மேவியும்

48நேரிசை ஆசிரியப்பா✓
இல்லற மேவியும் நல்லறம் புரியா
தகப்பகை யாரையு முகத்தே கொண்டு
பிறன்மனை விழைதல் பெரியோ ரிகழ்தல்
அறன்கடை நிற்ற லாவினைக் கோறல்
பொய்யில் வேதத் தையங் கொள்ளல்
செந்தீ யந்தணர் மந்திரம் பழித்தல்
இன்னதீக் குணங்கட் கிருப்பிட மாகிய
அன்னோ ருன்னை யடைவதி யாங்கனம்
என்றி னைத்துடுத் திலங்குறு
குன்றுகள் தோறுங் கோயில் கொண்டாயே.
49எழுசீராசிரிய விருத்தம்✓
கொண்டுமு நிறத்துச் செங்கட் பகட்டினி
லிவர்ந்து நாயனைக் கொலற்கு
மண்மீ தொருநாள் வருங்கொடி மறலிக்
கஞ்சியே யின்றுனை யடைந்தேன்
விண்மே லிரியுஞ் செஞ்சுடர்க் கடவு
ளறுவ ரெனும்படி விளங்குந்
தண்ணா ரறுமுகத் தேவே யன்றெனைத்
தாங்கிக் கொள்ளு தற்கே.
50சந்த விருத்தம்✓
கேத்திர மாயிரஞ் சாத்திர முறைப்படி
யாத்திரை செய்யுங் கேள்வியரே
கோத்திர மீதினிற் காத்திரங் கடிவதை
மாத்திரை யேனுமுட் கொள்வீரேல்
நேத்திரம் போகுமுன் நீர்த்திரை துகிரொடு
மாத்தரம் கொழி செந்தூர் போய்
தோத்திரம் பலசொலி நாத்தழும் புறகுகன்
நேர்த்தியைக் கண்டடி தொழுவீரே.
51நேரிசை வெண்பா✓
வீரகழற் சேவகரும் மெய்ப்பொருளை ஞானியருந்
தாரகத்திற் காணுந் தணிகையே-தீரநிற
அஞ்சங் கெடுத்தா னருமருக னற்றவர்தம்
வெஞ்சங் கெடுத்தான் விருப்பு.
52கட்டளைக் கலித்துறை✓
விருப்பரங் குன்னவ ரேத மொழித்தன மேன்மையொடு
திருப்பரங் குன்றி னிலைபெற்று நின்றன சீர்க்குறிஞ்சி
பொருப்பரங் குட்டியை வேட்டே யலைந்தன பூங்கரத்தில்
இருப்பரங் குன்றிய வேலொளிர் கந்த னிணையடியே.