முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
கழுகுமலை வளம்8 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

கழுகுமலை வளம்

1✓
பொன்னுலவு சென்னிகுள நன்னகர்அண் ணாமலைதன்
புந்தியில் மகிழ்ந்துநித்தம நின்றவன்—முந்தி
வெந்திறல் அரக்கர்களை வென்றவன்—மயில்
போல ஏனலின் மீது லாவுகி ராத மாதுமுன் ஏகி யேஅடி
பூவையே உனதுதஞ்சம் என்றவன்—ஈயும்
மாவையே இனிதுமென்று தின்றவன்.
2✓
மின்னுலவு சொன்னமுடி சென்னிஅணி விண்ணவர்தே
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே—கதி
வேண்டியே அகத்தில்அன்பு மன்னியே—பணி
வேல வன்கிரு பாகரன்குகன் மேவி டும்கழு காச லந்தனில்
விஞ்சிய வளங்களையான் உன்னியே—சொல்ல
ரஞ்சிதமாய்க் கேளடிவிற் பன்னியே.
3✓
மூசுவண்டு வாசமுண்டு காவில்மொண்டு தேனைஉண்டு
மோகன் முகாரிராகம் பாடுமே—மைய
லாகவே பெடையுடனே கூடுமே—அகல
மோது வாரிதி நீரை வாரிவிண் மீது லாவிய சீதளாகர
முகில்பெருஞ் சிகரம்முற்றும் மூடுமே—கண்டு
மயிலினம் சிறகைவிரித் தாடுமே.
4✓
தேசுகொண்ட பாரதந்த வீரதும்பி ராசிஅண்டர்
தேவதாரு வைக்கரத்தில் பிடிக்குமே—சுற்றும்
மேவிய கிளையைவளைத் தொடிக்குமே—ஒளிர்
சேய சந்திர னோடு ரசுப லாம ரங்களி லேநெ ருங்கிய
தீங்கனி மதுரசத்தை வடிக்குமே—மந்தி
பாங்கில்நின் றதனைஅள்ளிக் குடிக்குமே.
5✓
அந்தரம் உருவிவளர்ந் திந்தரன் உலகுகடந்(து)
அப்புறம்போய் நின்றசையும் சந்தனம்—மரம்
தப்பிதமில் லாதுகையால் வந்தனம்—எங்கள்
ஆறுமாமுக நாதனுக்கிடு மாறுபோலவி சால முற்றகொம்(பு)
அத்தனையும் நின்றுதலை சாய்க்குமே—அண்ட
பித்திகை தனிலும்சென்று தேய்க்குமே
6✓
கந்தரந் தொறும்கிடந்து கந்தரம் பயந்தொதுங்கக்
கர்ச்சனை புரியும்திறற் சிங்கமே—நெஞ்சில்
அச்சமுறும் விண்ணுறைமா தங்கமே—தடங்
காவி லேசில தாவி லேவளர் மாஇ றால்நடு வேகி ராதர்கள்
கார்முகம்உ வுங்கணைகள் ஏறுமே—அதில்
வார்மதுவால் வாரிஉவர் மாறுமே.
7✓
காலவடி வேலைநெடிய வாள்கொடிய நாகம் உமிழ்
காரிபிணை வாரிகணை பானலே—அன்ன
கூர்நயன வேடமின்னார் ஏனலே—காக்குங்
காலை மேலெறி மோது வார்கவ ணோடு மாமணி தேசு வீசவே
கதிரவன் தனதுமுகம் சுழிக்குமே—அவன்
குதிரையும்கண் ணைச்சுருக்கி விழிக்குமே.
8✓
ஓலமலி கோலநீல வேலைசூழும் ஞாலமீதில்
உத்தமர்இன் பத்துடனே வானமே—செல்ல
வைத்தபல சித்திரசோ பானமே—என
ஓங்கு கோங்ககில் நாங்கி லாங்கலி பாங்கு நீங்கரு வேங்கை பூங்கழை
ஒன்றொடொன்று வம்புகொண்டு நீளுமே—கோள்கள்
சென்றுசென்று நின்றுநின்று மீளுமே.