முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவி பாங்கியைத் தூதுவிடுதல்14 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவி பாங்கியைத் தூதுவிடுதல்

1✓
பூமி மெச்சிடும் அண் ணாம லைக்கொர்துணை ஆனவன்
மயில் வானவன்
ஒரு கானவன்—தினைப்
புனத்தைக் காக்கும்வள்ளி தனத்தைப் பார்க்கமெள்ளப் போனவன்.
2✓
சேம முற்றகழு காச லேசனையே தேடுதே
மனம் வாடுதே
கால்நள் ளாடுதே—இரு
செங்கை தங்கிநின்ற சங்கி னங்கழன் றோடுதே.
3✓
தென்ற லானபுலி வந்து கோபமொடு சீறுதே
தடு மாறுதே
இதழ் ஊறுதே—மெத்தத்
தீமையாம் இருளில் காம லாகிரியும் மீறுதே.
4✓
குன்ற மானமுலை ரெண்டும் மார்பில்விம்மிக் கொண்டுதே
தேமல் மண்டுதே
வெப்பம் கண்டுதே—மலர்க்
கொம்பு போலமென்ம ருங்கு லானதுந்து வண்டுதே.
5✓
உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்யநினைந் துருகுதே
முத்தம் கருகுதே
கண்ணீர் பெருகுதே—என்றன்
உச்சிக் கேறிக் காமப் பித்தம் கிறுகிறென்று வருகுதே.
6✓
வள்ளம் மேவும்பசும் பாலும் தேனும்அரு வருக்குதே
கசந் திருக்குதே
துன்பம் பெருக்குதே—வன்ன
வாரும் தாறுமாறாய்க் கீற வேதனமும் பருக்குதே.
7✓
பார மானகொங்கை ஓரம் வேடன்அம்பு பாயுதே
உடல் தேயுதே
மலர் தீயுதே—கொடும்
பாவி யானமதி ஆவி சோரவந்து காயுதே.
8✓
மார வேளினாலே கோர மானகாம வாதையே
எனும் தீதையே
தாரகத் தூதையே—சொல்லி
வாட்டம் தீர்குகனைக் கூட்டி வாடிஅடி கோதையே