முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவி இரங்கல்19 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவி இரங்கல்

1✓
நேம மாய்ப்பணிஅண் ணாம லைக்குதவு நீதனை
கழுகுமலை நாதனை—நெஞ்சில்
நினைக்க நினைக்கமீறி எனைக்கொல் லுதேகாம வேதனை
கோம ளக்கடலி லேமி குத்ததிரைக் கூட்டமே
அங்கமிலான்போ ராட்டமே—செய்து
கோர மேவிளைத்தால் தீரு மோஎனக்கு வாட்டமே
வெள்ளித் திரையின்மேலே துள்ளித் திரியும்குறா மீனமே
இனியும்உண்டோ மானமே—கொங்கை
வீக்கம் கொண்டதனால் ஏற்கு தில்லைஅன்ன பானமே
அள்ளற் கழிக்கரையுள் மெள்ளக் குலவிவரும் ஆமையே
கொடியாகாமத் தீமையே—நாளும்
அதிக ரித்திடலால் அவம திக்குதிந்தச் சீமையே.
2✓
பொங்கும் மதுமலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே
பெற்றுவளர்த்த அன்னையே—எந்தப்
போதும் வைதுவைது மோது கிறாள்பாவி என்னையே
தங்கு நித்திலம்புரி இங்கி தவலம்புரிச் சங்கமே
தென்றலும்ஒரு சிங்கமே—போலத்
தாக்க வேமயங்கி ஏக்க மாய்மெலிந்தேன் அங்கமே
மங்கை மார்கள்அத ரங்கள் நேர்பவள வல்லியே
பிரியேன்என்று சொல்லியே—போன
வாசக் கடம்பன்வர நேசத் துடன்சொல்லுமோ பல்லியே
அம்சு யத்துநிறை பங்க யத்துள்உறை அன்னமே
பிரியம்வைத்து முன்னமே—கட்டி
அணைத்த வேல்முருகன் தனைக்கண் காணேன்ஐயோ இன்னமே.