முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவி வருந்துதல்21 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவி வருந்துதல்

1✓
மஞ்சுநிகர் குந்தளமின்னே
சததளங்கள் விகசிதம்செய்
வாரிசாத னத்தில்வாழ்பொன்னே—செய்ய
வன்ன மேஒளிர் சொன்ன மே—நடை
அன்ன மேஇடை பின்ன மே—பெற
வந்ததன பாரவஞ்சியே
அதிவிருப்பத் துடன்உரைக்கும்
வார்த்தையைக்கேள் ஆசைமிஞ்சியே.
2✓
அஞ்சுவய தான பருவம்
தனில்எனது சிறுமனைமுன்
அங்கசவேள் போலஉருவம்—பெற்றே
அன்று வந்துந யந்து—மாலையில்
நெஞ்ச ழிந்தும யங்க—வேபுணர்
ஆறுமுக வேலவனையே
நினைவுகொண்டே மதிமருண்டே
ஆறுதில்லை என்னவினையே.
3✓
என்இரண்டு கண்ணும்தேடுதே
கனவிலும் மனதுநினைந்து
ஏக்கமுற்று அலைந்துவாடுதே—முன்னம்
என்றன் ஆகம தொன்ற—வேபுணர்ந்து
அன்று போனகு கந்தன்—ஆவலை
எண்ணிஎண்ணி என்ன பயனே
உருகிநிதம் மறுகிவிழ
இப்படிவி தித்தான்அயனே.
4✓
சென்னிகுளம் மேவியவாசன்
இனியதுதி அனுதினமும்
செய்திடும்அண் ணாமலைத்தாசன்—பாடும்
சிந்து மீதுமி குந்த—மோகமு
றும்சு சீலகு கன்ச—ரோருக
திவ்வியமு கங்கள்ஆறுமே
கண்களில் கண்டால் பெண்களுக் கெல்லாம்
செவ்விதழும் வாயும்ஊறுமே.