முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவியின் நிலைகூறித் தலைவனைப் பாங்கி அழைத்தல்15 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவியின் நிலைகூறித் தலைவனைப் பாங்கி அழைத்தல்

1✓
கண்ணா யிரம்படைத்த விண்ணூ ரிடம்தரித்த
கனவயி ரப்படை யவன்மக ளைப்புணர் கத்தனே—திருக்
கழுகு மலைப்பதி அனுதினம் உற்றிடு சுத்தனே
அண்ணா மலைக்கிடர்கள் நண்ணா தொழித்துமிக
அகமகி ழத்தன தருளைஅ ளித்திடும் ஐயனே—திசை
அரவமும் வெட்குற மயிலைந டத்திய துய்யனே.
2✓
மின்னோ மலர்க்கமலப் பொன்னோ எனப்புகல
விகசித ரத்தின நகைகள் தரித்தொளிர் மெய்யினாள்—கதிர்
விரவிய சித்திர வளையல்அ டுக்கிய கையினாள்
எந்நே ரமும்மனதில் உன்மீ தில்மையல்கொண்டு
எழுதிய சித்திரம் எனமவு னத்தில் இருக்கிறாள்—வள்ளத்து
இடுகிற புத்தமு தினையும்வெ றுத்தரு வருக்கிறாள்.
3✓
கும்பத் தினைச்சினந்து வம்பைப் பிதிர்த்தெழுந்து
கொடியிடை முற்றிலும் ஒடியவ ளைத்தது கொங்கையே—மனம்
குலவுக டப்பினில் நினைவுது வைத்தனள் மங்கையே
செம்பொற் சிலம்புகள்பு லம்பப் பெருந்தெருவில்
திகழ்தரு சிற்றில்களை புரிவதை விட்டவள் தயங்கினாள்—உன்றன்
திருஅழ கைக்கரு விழியுள்இ ருத்திஉள் மயங்கினாள்.
4✓
போரா டுதற்குரிய கூரார் மலர்க்கணையய்
புகழ்பெறு சித்தச தனுவத னைப்பொரு புருவத்தாள்—தவம்
புரிபவ ரைத்தன தடியில்வி ழுப்புரி பருவத்தாள்
சீரா கமெத்தைதனில் நேரா கவைத்துநமது
திருஅத ரக்கனி இதழைஅ ருத்தியே சேர்ஐயா—இந்தத்
தெரிவைஉ ளத்துனை அலதுபி டித்தவர் ஆர்ஐயா.