முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
முருகன் துதி4 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

முருகன் துதி

1✓
பவணக் கிரியதனுள் தானே
மன்னு வானே—பல
பாழி லேஅலை யாமல் இன்புற
நாளு மேஅருள் மேவு கண்கொடு பாராய்
இன்னல் தீராய்
2✓
அவுணப் பகையைமுடித் தோனே
புண்ய வானே—கதி
யாரு மேதரு வாரும் இங்கிலை
ஆத லால்அருள் வாய் இனம்புரி யாதே
பண்ணும் சூதே
3✓
விரகப் பெருவிதணத் தாலே
மண்ணின் மேலே—மனம்
வீணி லேஉழ லாது கந்தவி
சாக னேபுரி, நீயும் வஞ்சம்என் மீதே
எண்ணி டாதே
4✓
நரகச் சமன்வரும்அப் போதே
பின்நில் லாதே—பல
நாளு மேமற வாது நின்சிறு
பாத மாகிய சீத பங்கயம் நானே
உன்னி னேனே
5✓
நிமலப் பெருமிதச்செவ் வேளே
கன்னல் வேளே—தொடு
நீடு பாணம தால்ம ருண்டிடை
வாடு மாதரி டங்கெடாவகை நீயே
பண்ணு வாயே
6✓
குமரிக் காகப்பரல் கானே
நண்ணி னானே—இதழ்
கோதி லாதத போப லம்பெறு
நீதர் பால்அக லாது றைந்தருள் கோவே
என்னுள் வாவே
7✓
திடமற் றவனினுடைச் சேயே
அன்னை நீயே—திவ்ய
சேவை யேசெயும் ஞான பண்டிதர்
நாவி னூடினி தாவி ளைந்திடு தேனே
பொன்அன் னானே
8✓
கடல்சுற் றியஉலகப் பாலே
மின்னல் போலே—வரு
காய மாகிய தீய வன்பிணி
மேவி யேதவி யாமல் அன்பொடு காவே
என்ஐ யாவே