முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
முருகன் துதி5 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

முருகன் துதி

1✓
செந்தில் மாநகர்வாய்
கந்த நாதன்இரு
செய்ய பாத கஞ்சமே—நமக்கு
உய்ய மேவு தஞ்சமே—இன்று
செப்பு வது கொஞ்சமே—கேட்கத்
தீய பாதகவி
ரோத மாயம்விட்டுத்
திரும்பு வாயே நெஞ்சமே.
2✓
பந்த பாசம்இதை
எந்த வேளையிலும்
பார்க்கும் போது தொல்லையே—அல்லால்
ஆர்க்கும் ஆவ தில்லையே—ஒரு
பார மேரு வில்லையே—கையில்
பற்றும் நாதன்மாது
பெற்ற நீதன்மீது
பனுவல் சூடு வல்லையே.
3✓
மங்கை மார்கள்இரு
கொங்கை துங்கமத
வார ணங்கொள் கும்பமே—முகம்
பூர்ண சந்திர விம்பமே—பட
மாசு ணம்பி தம்பமே—துடை
மார வேள்அரசு
மண்ட பத்தருகில்
வைத்த ரெண்டு கம்பமே.
4✓
செங்கை சூரியோத
யம்கு லாவமலர்
சீத பத்ம தளமே—வாயில்
ஓது சொற்கள் குளமே—இதழ்
திவ்ய பொற்ப வளமே—என்று
சிந்தித் தால்குமரன்
கந்தப் பாதமலர்
சேர்வ தெவ்வா றுளமே.
5✓
வன்னி மானவிழி
மின்ன வேகடையில்
வக்ர தந்த சங்கமே—கொண்ட
உக்ர துங்க சிங்கமே—என்ன
மறலி தூதர் பொங்கமே—உற்று
வந்த வேளைநெஞ்சே
கந்த வேளைநினை
மருவு றாது பங்கமே.
6✓
சென்னி மாநகர்அண்
ணாம லைக்கவிஞன்
தேசம் எங்கும் இசையே—பெறப்
பேசு சந்த மிசையே—சற்றும்
தீர்ந்தி டாத நசையே—வைத்துச்
சேவ லாளிபதம்
ஆவ லோடு பணி
தினமும் நூறு விசையே.