முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
முருகன் துதி2 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

முருகன் துதி

1✓
சீர்வளர்ப சுந்தோகை மயிலான்—வள்ளி
செவ்விதழ்அல் லாதினிய தெள்ளமுதம் அயிலான்
போர்வளர்த டங்கையுறு மயிலான்—விமல
பொன்னடியை இன்னல்அற உன்னுதல்செய் வாமே.
2✓
குஞ்சரவ ணங்காவல் வீடா—தபடி
கொஞ்சிமரு வும்சரசு ரஞ்சிதவி சேடா
பைஞ்சரவ ணங்காவல் வீடா—வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.
3✓
வல்லவுணர் வழியாதும் விட்டு—வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்லவுணர் வழியாது மட்டு—மிஞ்சும்
ஞானபர மானந்த மோனம் அடை வாமே.
4✓
ஒருதந்த மாதங்க முகத்தான்—மகிழ
உத்தமக னிட்டன்என உற்றிடும் மகத்தான்
வருதந்த மாதங்க முகத்தான்—எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல்செய் வாமே.