முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைமகளிடம் வேறுபாடு கண்டு நற்றாய் வினவுதல்18 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைமகளிடம் வேறுபாடு கண்டு நற்றாய் வினவுதல்

1✓
என்னடி நான்பெற்ற மங்கை
இரு கொங்கை
களில் சங்கை—எண்ண
எத்தனை கோடியோ செங்கை—விர
லிடமேவளர் நகரேகைகள் மிகவேபடு வகைதோகையில்
ஏய்ந்த முருகவேள் கிள்ளி—உனைத்
தோய்ந்ததோ சொல்லடி கள்ளி.
2✓
அன்ன வயல்செந்தூர் வாசன்
மந்த காசன்
அன்பர் நேசன்—நாளும்
அண்ணா மலைக்கவி ராசன்—பாடும்
அமுதச்சுவை தருமுத்தமிழ் களபத்தொடு கமழ்பொற்புய
அற்புத வேலன்செய் ஜாலம்—தன்னால்
கற்பழிந் தாயோஇக் காலம்.
3✓
சித்தசன் கொக்கோக நூலை
அந்தி மாலை
யொடு காலை—வைத்துச்
சிந்திப்ப தாச்சுதுன் வேலை—சிமிழ்ச்
சின்னத்தன மடவஞ்சியே! உன்னைப்பணி வொடுகெஞ்சியே
சேவற் கொடியோன்பூஞ் சோலை—தனில்
தேடிப் புரிந்தானோ லீலை.
4✓
மெத்தப் பிரமைகொண் டேங்கி
கொங்கை வீங்கி
நேசப் பாங்கி—மாரை
விட்டுத் தனியாக நீங்கி—வடி
வேலுக்கதி பதிமையலை மேலிட்டல றியதையலே
வெட்கத்தைப் போக்கடித் தாயோ—காம
வேசைத் தனம்படித் தாயோ.
5✓
இன்னம் விவாகமே இல்லை
கமழ் கொல்லை
வெடி முல்லை—குழல்
எங்கும்சிங் காரித்து வில்லை—சந்தம்
இனிதாகிய களபம்தன கனமேருவில் அணிகின்றனை
இப்படி யும்தலை விதியோ—பெண்ணே
செப்படி யேஇது மதியோ.
6✓
சன்னத மாய்க்காமப் பேயே
பிடித் தாயே
வேப்பங் காயே—போலச்
சாதம் வெறுத்தாயே நீயே!—பெருஞ்
சண்டாளியே! கண்டோர்திரள்கொண்டேபழி விண்டார்நம
சாதிக்கெல் லாம்ஒரு வடுவே—வரத்
தான்பிறந் தாய்வந்து நடுவே.
7✓
வண்ணப் பயிரவி தோடி
ராகம் பாடி
உற வாடி—சப்ர
மஞ்சத்தி லேசென்று கூடி—உன்றன்
வன்னப்படி கம்போல்ஒளிர் கன்னத்தினி லும்தேன்இதழ்
வாயிலும் கொஞ்சம்பற் குறியோ—வைத்தான்
வாலை மகனுக்கும் வெறியோ.
8✓
எண்ணம் குமரவேள் பாலே
சென்ற தாலே
இனி மேலே—வயிறு
எப்படி யாகிலும் சூலே—வரும்
என்றேஎன துளம்அஞ்சுது நன்றேசொலின் என்வஞ்சகம்
இல்லை கிழவன்சொல் வீணைக்—காரர்க்(கு)
கேட்காதென் றாலும்கண் ணாணே.