முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
முருகன் துதி3 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

முருகன் துதி

1✓
மரகத விகசித ஒளிதவழ் இருசிறை
மருவிய மயில்மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன்
2✓
குரகத சுகமணி வளிரதம் நடவிய
குவலய சரதரன் எனும்த எனுமகிழ் கோலன் பரை பாலன்
3✓
பரிபுர அணிகல கலஎன ஒலிபுரி
பரிதிஉ தயமதில் அவிழ்மரை மலர்நிகர் பாதன் குக நாதன்
4✓
திரிபுர மவைஒரு நொடிதனில் எரிகொடு
சிதைவுற நகைபுரி சிவன்மன மகிழ்உப தேசன் முரு கேசன்
5✓
பதுமநி தியினொடு பணிலநி தியும்எழில
பரவிய சுரபியும் உறுசுர புரன்மகள் பாகன் கன யோகன்
6✓
சததள நளினத விசுமிசை வதிஒரு
சதுமுக விதிசிறை யதிலுற நிறுவுவி சாகன் தட வாகன்
7✓
குரைதிரை வரைநிரை புரைதர உலவிய
குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன்
8✓
பரைசிவை பகவதி உதவிய சரவண
பவன்அறு முககுகன் மிசைமது ரிதகவி பாடும் சகம் நாடும்