முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவியின் ஊடல்22 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவியின் ஊடல்

1✓
செந்தூர் வளர்முருக நாதா—அருணோதயச்
செந்தா மரைநிகரும் பாதா—திகழ
சிந்தையில்அண் ணாமலைசெய் நிந்தையைஎண் ணாதருள்செய்
சித்திர வேற்கரவி நோதா—உனதுவஞ்சச்
செய்கைஇன் னமும்தெரி யாதா.
2✓
சந்தோஷ மாகவேபோய் வீடு—வீடுகள்தோறும்
சரசம் கொண் டாடுவதே பாடு—வந்துன்
றன்னுடனே சேர்பிரியக் கன்னியர்கள் பேர்வ்ரியச்
சகஸ்திரம் வேணுமெவெள் ளேடு—தனித்தோரிடம்
தங்கியே மேயுமோவெள் ளாடு.
3✓
வேசையர் வாசலிலே சென்று—தம்பலங்களை
வெட்கமில் லாமல்வாங்கி மென்று—தின்று
மெத்தப்பயித் தியம்கொண்டு சுற்றித்திரிந் தேமருண்டு
வீடுதே டிவந்தாயே இன்று—தொடவே மாட்டேன்
வேணும்என் றாலும்போடு கொன்று.
4✓
ஆசைகொண்டவருக்கு ரோசம்—கிடையாதென்பார்
அப்படிக் காகிலும்விஸ் வாசம்—வைக்கும்
அந்தவிலைப் பெண்டுகளைச் சொந்தமெனக் கொண்டனையோ
ஆனாலும் உன்னைப்போல மோசம்—போனவர் உண்டோ
ஆரும்செய் வாரேபரி காசம்.
5✓
கந்தாசெய் யாதேபல வந்தம்—புதுமலரைக்
கசக்கி அறிவார்களோ கந்தம்—சற்றும்
காதல்இல்லா மல்சினந்த மாதவைலி யப்பிடித்துக்
கலந்தால் வருமோசுகா னந்தம்—உனக்கெனக்குக்
கனவிலும் இல்லைஇனித் தொந்தம்.
6✓
எந்தப் பிறப்பினுமே வல்லி—உனைஅல்லாமல்
எவளையும் பாரேன்என்று சொல்லி—ஊரில்
எத்தனைப ரத்தையரை நித்தமும்அ ணைத்தனையோ
இப்படிக் காசிகாஞ்சி தில்லி—கன்யாகுமரி
எங்குபார்த் தாலும்இல்லை சல்லி.
7✓
கங்கு கரைஇல்லையே ஜாடை—சொல்லிவைபவர்
கட்டுகி றாயேஎதற்கு ஆடை—மானம்
காக்கவல்ல வாஎன்பாலே சேர்க்கையில்லா தேஅன்பாலே
காத்தாயே வேசைமாதர் மேடை—கைவசமாமோ
கலப்புல்லுத் தின்றாலுமே காடை.
8✓
குங்குமம் சந்தனம்எவ் வாது—சுககதம்பம்
குமுகுமென் றேபுயத்தின் மீது—வாசம்
கொட்டுதொழில் நெற்றிசந்தப் பொட்டொடுபு கட்டுகிந்தக்
கோலம் புதிதாய்வந்த தேது—நடந்ததெல்லாம்
கொஞ்சம்சொல் வாய்பண்ணாதே சூது.