முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
துதி10 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

துதி

1✓
கன்னல் சூழ்பழ னம்புடை சூழ்கழு
காச லந்தனில் வாழ்பிரா தாபனே—கன
வாசம் எங்கும் கமழ்கின்ற நீபனே—வளர்
காத லோடிரு போதி லும்பல
போதி னால்பணி வார்ம னத்துறை
காரி ருட்குவை நீக்கிய தீபனே—அதி
சூர பத்மனைத் தாக்கிய கோபனே.
2✓
சென்னி மாநகர் வாழும்அண் ணாமலை
செப்பு செந்தமி ழுக்கதி நேசனே—சிவ
சுப்ர மண்யன்எ னும்பிர காசனே—கொடுஞ்
சிந்தை நைந்துபு லம்பி நின்திரு
மந்தி ரந்தனில் வந்த டைந்துனைச்
சேவிக் குங்குணம் என்றனக் காகுமோ—மிகு
பாவிக் கும்துயர் எப்படிப் போகுமோ.
3✓
வந்த வர்க்குப் பழம்புளிங் காடியே
தந்தி டச்சகி யார்தமைத் தேடியே—பிர
பந்தம் எத்தனை எத்தனை கோடியே—குலை
வாழை யின்பழ மோக னிந்திடும்
மாழை யின்கனி யோஎ னும்படி
மதுரி தம்பெற வேநிதம் பாடியே—பரி
செதுவும் இங்குப்பெ றாதுளம் வாடியே.
4✓
வெந்த ரைக்குள் வெடிப்பிலைட் பாலையே
சிந்து பித்தரைப் போல்வெறு வேலையே—செய்யும்
வீணன் நான்விளங் கும்தண்டைக் காலையே—எந்த
வேளை யும்துதி கூற வும்துயர்
நீளும் வெம்பவம் மாற வும்பரி
வில்வ வேணிசேர் தற்பர வாலையே—தரும்
செல்வ மேஎனும் கற்பகச் சோலையே.