முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவன் வருத்தம் சாற்றல்11 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவன் வருத்தம் சாற்றல்

1✓
வன்னத் தினைமாவைத் தெள்ளியே—உண்ணும்
வாழ்க்கைக் குறக்குல வள்ளியே—உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே—இரு
வடமேருவை நிகராகிய
புயமீதணி பலமாமணி
மாலை படர்எனத் துள்ளியே—விழ
வான்மதி வீசும்தீ அள்ளியே.
2✓
கன்னத் தினிற்குயில் சத்தமே—கேட்கக்
கன்றுது பார்என்றன் சித்தமே—மயக்
கம்செய்யு தேகாமப் பித்தமே—உடல்
கனல்ஏறிய மெழுகாகிய
தினியாகிலும் அடிபாதகி
கட்டி அணைத்தொரு முத்தமே—தந்தால்
கைதொழு வேன்உன்னை நித்தமே.
3✓
வாடி யிருப்பது வஞ்சமோ—பொல்லா
வன்கருங் கல்லோஉன் நெஞ்சமோ—கொண்ட
மையற் பயித்தியம் கொஞ்சமோ—சிலை
மதன்ஆகம முதுகாவியம்
அதிலேமொழி சுகலீலையின்
மார்க்கம் உனக்கென்ன நஞ்சமோ—ஒரு
வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ.
4✓
தேடக் கிடையாத சொன்னமே—உயிர்ச்
சித்திர மேமட வன்னமே—அரோ
சிக்குது பால்தயிர் அன்னமே—பொரு
சிலைவேள்கணை கொலைவேல்என
விரிமார்பினில் நடுவேதொளை
செய்வது கண்டிலை இன்னமே—என்ன
செய்தேனோ நான்பழி முன்னமே.