முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
விநாயகர் துதி1 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

விநாயகர் துதி

1✓
திருவுற் றிலகுகங்க வரையிற் புகழ்மிகுந்து
திகழத் தினம்உறைந்த வாசனை—மிகு
மகிமைச் சுகிர்ததொண்டர் நேசனை—பல
தீய பாதக காரர்ஆகிய சூரர் யாவரும்மாள வேசெய்து
சிகரக் கிரிபிளந்த வேலனை—உமை
தகரக் குழல்கொள்வஞ்சி பாலனை
2✓
மருவுற் றினர்விரிந்து மதுபக் குலம்முழங்க
மதுமொய்த் திழிகடம்ப ஆரனை—விக
சிதசித் ரசிகிஉந்து வீரனை—எழில்
மாக நாககு மாரி ஆகிய மாதி னோடுகி ராத நாயகி
மருவப் புளகரும்பு தோளனை—எனை
அருமைப் பணிகொளும்த யாளனை
3✓
தெரிதற் கரியமந்திர மதனைத் தனது தந்தை
செவியிற் புகமொழிந்த வாயனை—இள
ரவியிற் கதிர்சிறந்த காயனை—அகல்
தேவ நாடுகெ டாதுநீடிய சேனை காவல னாக வேவரு
திறலுற் றசிவசுந்த நாதனை—விரி
மறையத் தொளிர்கின்ற பாதனை
4✓
மருளற் றிடநினைந்து மனதிற் களிசிறந்து
மதுரக் கனிவுவந்து கூடவே—பல
விதமுற் றிலகுசிந்து பாடவே—அலை
வாரி நீரினை வாரி மேல்வரு மாரி நேர்தரு மாமதாசல
வதனப் பரன்இரண்டு தாளையே—நமக்கு
உதவப் பணிவம்இந்த வேளையே.