முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவி வருந்தல்17 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவி வருந்தல்

1✓
பாளைவாய் கமுகில்வந்து வாளைபாய் வயல்சூழ்செந்தூர்
பாலனம் புரியவந்த புண்ணியா—போகம்
காலையும்செய் கிறாய்முன்பின் எண்ணியா?
வேளையோ விடிந்ததையா நாளைவாரேன் இன்றுகையை
விட்டிடென் றாலும்விடாமல் பிடிக்கிறாய்—பாலை
ஒட்டவே மடியரிந்து குடிக்கிறாய்.
2✓
நித்தமும்அண் ணாமலைசெய் குற்றம்எண்ணா வேலாகண்டோர்
நின்இதழ்ப் பவளங்களில் வெள்ளையே—தெனில்
என்னசொல்வேன் நான்ஒருபெண் பிள்ளையே
மத்தகம் நிகர்தனத்தில் மெத்தநக ரேகைபட்டு
மாலைப்பிறை போல்அனந்தம் தோணுதே—இது
கேலிக்கிட மாகும்என்றுள் நாணுதே.
3✓
உன்னையும்வி வாகம்இல்லா என்னையுமே அன்னை கண்டால்
ஒன்றும்சொல்லி டாளோஅடா பாவியே—இன்று
தின்றிடுவேன் என்பாள்பச்சை நாவியே
சன்னைசாடை யாகவந்தென் தன்னைஅணை வாய்நீஎன்று
சாற்றிடும்என் உண்மையான சொல்லையே—விட்டுக்
கூற்றுவன்போல் வந்தாய்என்ன தொல்லையே.
4✓
சாறுசேர் கரும்புருசி யாயிருந்தா லும்வேரோடே
தான்பறித்துத் தின்னுவது ஞாயமோ—முழு
ஆண்பிள்ளைக் கிதுதான்சம்பிர தாயமோ
நூறுதரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால்
நோகுமோநோ காதோஎனக் குள்ளமே—கொண்டு
போகுமோ கிணற்றுநீரை வெள்ளமே.