முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவனைக் கலந்த தலைவி பாங்கிக்குக் கூறுதல்13 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவனைக் கலந்த தலைவி பாங்கிக்குக் கூறுதல்

1✓
செந்தில் மாநக ரந்தனில் மேவிய
தேசிக னாம்முரு கேசன்—மயில்
வாசியில் ஏறும்உல் லாசன்—சிறு
திங்க ளும்பண சங்க மாசுண
மும்து லங்கிய கங்கை யாறொடு
செஞ்ச டாடவி மீதணி வார்செவி
சேரமுன் ஓதுப தேசன்—அடி
யார்தமை ஆள்விக வாசன்.
2✓
எந்த நேரமும் வந்தனை செய்திடி
எண்ணும்அண் ணாமலைத் தாசன்—துதி
பண்ணும்மெய்ஞ் ஞானவி லாசன்—என்னோடு
இந்தெ ழுந்துத யங்கு மாலையில்
வந்து வண்டுமு ழங்கு சோலையில்
இன்ப சாகரம் ஆகிய லீலைகள்
அன்புட னேசெய்தான் மானே—அந்தச்
சம்பிரமம் என்னசொல் வேனே.
3✓
மங்கை மார்பல ரும்புடை சூழ்தர
மாமலர் கொய்திடச் சென்றேன்—அங்கோர்
பூமரத் தேதனி நின்றேன்—சந்த்ர
மண்ட லங்களை வென்ற ஆனனம்
ஐந்தொ டொன்றும்மி குந்து வார்மது
வண்ட லோடுக டம்பெனும் ஆரமும்
வாரமும் தோன்றிடச் சேர்ந்தான்—என்றன்
ஏரும் பார்த் தேகளி கூர்ந்தான்.
4✓
பங்க யாசன மேலுறை நான்முகப்
பாதக னும்மலர்க் கைதான்—கொண்டுன்
சோதியை எப்படிச் செய்தான்?—அடி
பஞ்சு ரஞ்சினும் அஞ்சு சீரடி
கொஞ்சு ரஞ்சித வஞ்சி யேபுவி
பட்டு நீநிலை நிற்கஒண் ணாதென்று
பன்மலர் மெத்தைஒன் றிட்டான்—பின்பு
மென்மலர் எந்தன்கை தொட்டான்.