முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவனிடம் கூறுவது24 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவனிடம் கூறுவது

1✓
கந்தம்சேர் தருபொழில் திகழ்கழு
காசல மாநகர் வாழ்முருகா
கஞ்சந்தான் எனஒளிர் விகசித
காதல மாதவன் மால்மருகா
கருதும்அண் ணாமலை தேசிகனே அருணைஉண் ணாமலை யாள்மகனே
கங்குல்பொருந் தும்குழல்தங் கும்சிறுபெண் ணும்தினமும்
கண்டும யங்கினள் அணவாயே.
2✓
தொந்தந்தோம் திங்கண என்றுது
லங்கும்அ ரம்பையர் ஆடிடவே
துன்றும்கார் மழைஎன வீணைகள்
தும்புரு நாரதர் பாடிடவே
சுடர்மர கதமிகர் தோகையிலே திடமொடு பவனிநீ போகையிலே
தொங்கல்களும் சங்கினமும் பொன்கலையும் சிந்தினள்உன்
சொந்தம்எ னும்கனி அணைவாயே.
3✓
அண்டம்பா தலமதி லும்கிடை
யாதச வுந்தர ரூபவதி
அஞ்சம்பால் அனுதினம் அமர்புரி
அங்கச ராசன்அ டைந்தநிதி
அகிலமு மருள்பிர காசமயில் மிகமது ரிதமொழி பேசுகுயில்
அன்றிலும்இந் தும்சுடலும் கண்டுமருண் டஞ்சுதல் கொண்
டங்கம்மெ லிந்தனள் அதுபாராய்.