வார ணிந்தமுலை மங்கை மாரும்,வரி
வண்டி னங்களுடன் ஐவகை
வன்ன மீறவளர் கிளிக ளும்,பிறவும்,
வளமை மேவுகுன் றக்குடித்
தார ணிந்துபுய வீர வாகுபணி
சண்முகக் கடவுள் முன்புபோய்த்
தகுதி யானமொழி பகரில், அன்னவர்
தரிப்பர் கொல்?எனம தித்துநான்
சீர ணிந்தமன தைவி டுக்க,அது
சென்று செங்கமல மலரைநேர்
திருவ டித்துணையில், மதுவெ னப்பெருகு
சீர ருட்களி பொருந்திஓர்
கூர ணிந்தகதிர் வேலி னும்பொருவில்
குக்கு டத்தினும்நெ ருங்குதோட்
குவடி டத்தினு மலைக்கு றத்திஇதழ்
கொண்ட வாய்களினும் நின்றதே.