முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
புயவகுப்பு. 64 கலை சந்தக்கவி3 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

புயவகுப்பு. 64 கலை சந்தக்கவி

முருகப்பெருமான் தோள்களின் சிறப்புகளைக் கூறுவது✓
வேளினது சேனையெனும் மாதரனை வோருமிக
விரகமிஞ் சித்துதித் திடநீடி நின்றன
மேருகிரி ஆதியஎ லாமலையும் நாணமுற
மிகநெருங் கிக்கதிப் புடனேவ ளர்ந்தன
வேரிமது ஓடவல நீபமுதல் மாலிகைகள்
விகசிதம் பெற்றிடத் தினமேய ணிந்தன
வேயனைய தோளியர்(கண்) ணோடிணைய தாகுமென
மிளிரும்வண் டுற்றிசைத் திடுசீர்ரொ ருந்தின
வேறிணையி லாதமணம் நாறுமதம் ஆதியவை
விரவுசந் தத்தைவெப் பறவேது தைந்தன
மீறுமொளி சேர்பரிதி யாவும்நிகர் தோளணிகள்
விலையறும் பொற்குவைப் பணியோடி யைந்தன
வேல்குலிசம் வாள்பலகை சூலமுத லாயபல
விபுதர்தங் கட்குவப் புறவேசு மந்தன
மேலுலகி னோரும்வசம் மாறஇடி நாணமுற
வெகுதரஞ் சத்தமிட் டிடுகோழி கொண்டன.
✓
வேதம்ஒரு நாலுமுணர் வான்அலற மோதியபின்
விதனமிஞ் சச்சிறைக் கிடைபோடும் வம்பின
மேகம்நிகர் தாருகன்முன் ஆழிபறி போனதனை
விறல்முகுந் தற்களித் திடும்ஆண்மை துன்றின
வீரைதரும் ஆலம்அமு தாகநுகர் வான்முடியில்
வினவும்விஞ் சைப்பொருட் சொலும்நா ளிவர்ந்தன
மேடவடி வானவனை நீறுசெயு மாமுனிவன்
வினையொழிந் திட்டமிக் குறநீறு தந்தன
வீடுகரு தாடிமை யாவதனை யேகருதும்
விரதர்தஞ் சொற்றிருத் தொடைகோடி ஒன்றின
வேள்விமுனி வோர்பதறி ஓடவரு சேயதகர்
வெகுளிமங் கக்கசைப் படையால றைந்தன
வேழமக ளாமவள்த னாசலம தால்உழுது
விழுதழும்(பு) உற்றிடத் தணியாதெ ழுந்தன
வேடர்இதண் மீதுவளர் பேதைகொளும் ஊடலிடை
மிதிபடுஞ் சிற்றடித் தடமோடி லங்கின.
✓
காளியெறி சூலம்இரு கூறுபடு மாறுபொரு
கரம்இரண் டுற்றவற்(கு) ஒருநாள்இ ரங்கின
காசுதவிர் வீரம்உறும் ஓர்விசைய னார்மனது
களிபொருந் தச்சரப் படையீய வந்தன
காதுபுரி யாதுசிவ யோகநிலை நாடுபவர்
கனவில்அஞ் சற்கரத் தொடுதோணும் நண்பின
காதல்வினை தீரஅருள் கூர்வரத மேவிஒளிர்
கவினுறுங் கைப்புகழ்ச் சியெலாம்அ டைந்தன
காரிமுத லானபல வீரர்களும் ஆவலொடு
கழறிடுஞ் சித்திரத் திறலால்உ யர்ந்தன
காணரிய வான்முகடு சேர்இரதம் வீரரொடு
கடிதுவந் துற்றிடப் பொருதார்வ மிஞ்சின
காரிருளை நேரும்ஒரு மாயமலை யோடுசில
கயவர்அன்(று) இற்றிடப் பொருதார்வம் மிஞ்சின
கானவய மாமுகம்ஓ ராயிரம்உ ளான்உரைசெய்
கபடவெஞ் சொற்படிக்(கு) அவன்ஆவி யுண்டன
✓
காலனிகர் சூரன்விதிர் வாளொடெதிர் ஓடிவரு
கணம்நெடுஞ் சத்திவிட் டிருகூறு கண்டன
காவிரியில் ஓர்நெடிய வேயின்உரு வாகிவளர்
கடவுள்தன் துக்கமுற் றறவேபு ரிந்தன
காய்பரிதி ஏகும்வழி மூடியப ராரையொடு
கடலுறுங் கொக்கினைப் பிளவாவ கிர்ந்தன
காமம்அறி யாதமுனி வோருமண மானமடல்
கனில்வரைந் துட்சலிப் புறவேதி கழ்ந்தன
காமருவு லோகமதில் மாதரணி தாலியொடு
கனகமஞ் சத்தில்உற் றிடநூல்பு ரந்தன
காவிமலர் போலும்விழி சேரும்ஒரு நாரியவள்
கணவன்வம் புக்கிளைத் திடும்நாள்எ திர்ந்தன
காரணநி ராமயம னோலயசுகோதயமெய்
கருதுமன் பற்றபொய்ச் சமண்வேர்க ளைந்தன
காசினியின் வாழ்வுபெரி தாகுமென நாடுமவர்
கவலைநெஞ் சத்தினுட் புகுதாதி ருந்தன
✓
பாளிதமும் மோதகமும் மீறுநுகர் வானுடைய
பகைவிளைந் திட்டதற்(கு) அயராமல் உந்தின
பாரதன மேருவொடு வீழஒரு நாள்நெடிய
பரிமுகந் துற்றமற் பெறுபேயை வென்றன
பாவலவர் கோவனைய கீரனெனும் ஞானமுனி
பகரும்இன் சொற்றமிழ்க் கவியால்ம கிழ்ந்தன
பாலைநில மேவியபொ யாமொழிமுன் ஓர்பொழுது
பரியதண் டத்தினைக் கொடுபோய விர்ந்தன
பானலணி யோடுகிளி யாம்அருணை மேயமுனி
பரவுசந் தத்திருப் புகழால்நி றைந்தன
பாகுநிக ராயதமிழ் தேர்முனிவர் ஏழெழுவர்
பரிவொழிந் துட்களிப் புறவேமு யன்றன
பாலையம காமுனிவன் ஆதியதி யானபரர்
பணிபுரிந் தத்தொழிற் செயவேவி ரும்பின
பாடல்பு ராதிபதி நேர்பரம ஞானியர்கள்
பனுவல்கொண் டப்படிக் கொளவேமு யன்றன
✓
பாதமலர் மீதுபல கீதலர் சூடுகிலர்
பதகர்தம் பக்கலுற் றிடவேது ரந்தன
பாடுகிற நாவுதொறும் வாணிகுடி யாவுறுதல்
பழுதெனுந் துட்டரைக் கொலவேது ணிந்தன
பாவரகி தாகரசு கோததியி லேமருவு
பவளஒண் கொப்பெனச் சொலவேப டர்ந்தன
பாகரச கோமளவி னோதநய சீலமிகு
பதமுணர்ந் திட்டகைக் கிளிதாள்ப திந்தன
பாதகநி சாசரர்கள் தோமரம் தோடுபல
பகழிவெந் திற்றிடக் கனலாமு னிந்தன
பாய்பரிஇ லாஇரதம் ஈயுமலை யால்உயிர்கொள்
பதிதர்மங் கத்தொலைத் தறவேநி வந்தன
பாமரரும் ஓசைநடை யால்மகிழ நீடுகவி
பயிலும்நெஞ் சத்தின்ஒப் புறவேசி வந்தன
பாழில்முய லாதகவு மாரர்மன மாம்மகளிர்
பகலினும் தொட்டணைத் திடவேமு யங்கின
✓
மாளிகையி லேஅளவில் கூகையொடு கூ(வு)அவுண
மகளிர்நிந் தித்துமிக் கழவேகு ளிர்ந்தன
மாமலரில் வாழும்இரு நால்மகளி ராம்அவருள்
வயவர்சிந் திக்கும்உத் தமிதோள்பு ணர்ந்தன
வாசமிகு பூவுறுப னீரிலையின் நீறுகொடு
மறுவில்பண் பைத்தொகுத் தருள்சீர்பொ ருந்தின
வானில்உடு வாகும்இரு மூவரொடு மேனைமகள்
மலியும்அன் புற்றெடுக் கையில்மார்பு ரிஞ்சின
வாளரவெ லாம்அவச மாகநடம் ஆடிவரு
மயிலெனும் பொற்பரிக் குசைமேவு கின்றன
வாரணகு லாதிபதி யானதிரு ஞானமதில்
மதசலங் கொட்டும்உச் சியில்மோது மொய்ம்பின
வாதமிடு மூடரறி யாதநிலை தேறுமவர்
மகிமையென் கப்பெருத் திடுசீர்பொ திந்தன
மாமிசம்உ ணாதுதவ மேபுரிகு வாரெதிர்சின்
மயமிலங் கக்குறித் திடும்நீர்கி டந்தன
✓
மாவிரத யோகியர்கள் பூசைவிதி சோர்வுறினும்
வழுவிலின் பத்துறச் செயுமால்வி ழைந்தன
மாவினொடு தேன்விரவி ஈயுமொரு மாதுமனம்
மகிழஎன்(று) அத்தினத் தினிலேகு விந்தன
மாலைவரு சேயநிற மேகமதின் மீதொளிரும்
மறுவில்செம் பொற்றடித்(து) எனநூல்பிறழ்ந்தன
வாணிமுதலோர் பலர்பி யாகரண நூல்உணர
வளைபிரம்பிட்டடித் தருள்கூர்அணங்கின
மாறில்உமை கூறும்வசை நாடியொரு காலம்அரன்
மறுகுமுன் புட்கையிற்றலையேகொணர்ந்தன
மாயைஉட லாகும்எனும் மூலவரை வேறுபடு
வடிவுகொண் டுற்றிடற்கிடமாவிளங்கின
வார்குழையில் மேவுகுழை தாவுமெழில் நாடுமவர்
வறுமைதுஞ்சக்கொடுத் திடவேசிறந்தன
மாசுதவிர் மேலவர்கள் கூறுமறை ஓசைநலம்
மருவுகுன்றக்குடிக் குகவேள்புயங்களே.
12நேரிசை வெண்பா✓
புயம்ஆ றிரண்டுடைய புங்கவனை, வன்கைக்
கயமா முகனைக் கடிந்து—செயமாருங்
குன்றக் குடியில்வரு கோமானைப் போற்றுநர்பொன்
மன்றத்(து) அரனையொப்பா வார்.
13கட்டளைக் கலித்துறை✓
வாரணங் கூப்பிடும் குன்றக் குடியில் வளர்குகனைக்
காரண சற்குரு என்றுண ராத கசடருக்கும்
பூரண போதம் வருமோ?வெண் டாமரைப் பூவில்வைகி
ஆரணத் தோன்திரு நாவில்நின்.றாடும் அருட்கொடியே.
14கொச்சகக் கலிப்பா✓
அருட்கடலாம் உனைச்சிறிதும் அகத்தினிடை கருதாமல்
தெருட்சுடராய்த் தமைமதித்துத் திரிபவர்க்கும் இரங்குவையோ
மருட்கருங்கட் குறமானாள் வதிதருதண் புனத்தேகி
இருட்கருவேட் கிளைத்தார்போன் றிறைஞ்சுகுன்றக் குடிக்கோவே.
15கலிவிருத்தம்✓
கோவை வாய்இதழ்க் குறமகள் கொழுநனை, விண்ணோர்
பாவை யூடலுக்(கு) உருகிநின்(று) இதம்பல பகரும்
தேவை, மாதவர் பரவுகுன் றக்குடிச் சேயைப்,
பூவை பாகனுக் கினியவன் என்பது பொதுவே.
16கட்டளைக்கலிப்பா✓
பொதுவி லாடும் புராந்தகன் மைந்தனைப்
பொருவில் குன்றக் குடிமேவு செல்வனைக்
கதுமெ னத்தொழு(து) உய்யாத மூடரைக்
கண்ணி னாற்றினம் காணவும் கூடுமோ!
மதும லர்ச்செழுங் காவியும் மூவிரு
வரைபொ ருந்திய மாமணிக் கோவையும்
பதும மென்கையிற் றண்டமும் நீறுதோய்
பவள மேனியைப் பார்த்தவல் லோர்களே.
17கலிநிலைத்துறை✓
வல்லார் விரும்பும்நம் குன்றக் குடிக்கோவில் வளர்வேலனைப்
பல்லாயி ரங்கோடி அண்டத்தும் நிறைகின்ற பரமன்என்றிடா(து)
அல்லார் களத்(து)ஆதி தருமைந்தன் என்றோதி அயர்வோர்கள்பால்
செல்லா திருந்(து)ஆ றெழுத்தோதல் கவுமாரர் செயலாகுமே.
18அறுசீர்க் கழிநெடில்✓
செயலறிந்து தவம்புரியச் சோம்பலுற்றுக்
கலகலெனும் சிலநூல் கற்று
மயலகன்ற பெரியோரிற் றமைமதிக்கும்
சிலருளத்தும் வசிக்கின் றாயோ
வயல்வளஞ்சேர்ந் திலங்குகுன்றக் குடித்தலத்து
முருகோனே! வள்ளை சாடும்
கயலனைய விழிமடவார் இருவரொடு
மயிலேறும் கருணை வாழ்வே.
19எழுசீர்க் கழிநெடில்✓
வாழ்வெனும் சிறுமியை மணஞ்செய்து நாடொறும்
மயக்கொடு முயக்கும் உற்றும்
தாழ்வொழிந் திடஅருளும் ஈகையா கியமகன்
தனைவிரும் பார்கள் நரரோ?
வீழ்வெனும் கொடிதற உனக்கன்பு புரிகின்ற
மெய்ப்பத்தர் சித்தர் அருளால்
ஆழ்வொருங் குதவிவளர் குன்றக் குடித்தலத்(து)
அமர்கின்ற கருணை முகிலே.
20எண்சீர்ச் சந்தக்கவி✓
கருணை முகிலுறழ் சிந்தைக் குரவர்
கழறு முதுமொழி நம்பித் துகளில்
புருவ நடுவழி கண்டிட் டவர்கள்
புனித சமரசம் என்றைக் கருள்வை?
அருண கிரியென வந்தித் துருரும்
அடியர் மனம்நிகர் குன்றக் குடியின்
முருகன் அறுமுகன் என்றெத் தினமும்
மொழியும் நலம்உத வுஞ்சற் குருவே.
21ஒன்பதுசீர்ச் சந்த விருத்தம்✓
சற்குருவை நிந்தித் திடத்துணியும் வம்பர்பகர்
சத்தமுழு துங்கெட் டுனக்குரிமை கொண்டு முயல்வோர்
சொற்குருகும் நெஞ்சத் தினர்க்கடிமை என்றுவளர்
சுத்தகுணர் செஞ்சொற் பெருக்கொலி விளங்க அருள்வாய்
பொற்குவடும் ஒஞ்சிக் கிடக்கவுயர் கின்றதொரு
பொற்புமிகு குன்றக் குடிக்கிரியில் நின்ற முருகா
மற்குருகு தங்கிக் களிக்கஒளிர் செங்கையொடு
மற்றிணையில் பைம்பொற் சிகப்பரியி வர்ந்த குகனே.
22பத்துசீர்க்கழிநெடில் சந்தக்கவி✓
குகனெனச் சிந்தித் துணைப்பாடும் நன்மையுறு பெரியோர்
குவளையொக் குங்கட் கணைப்பாவை யன்னவர்கள் நடுவே
பகுழிகைக் கொண்டற் பகட்பேறு மன்னவன திகல்சேர்
பழுதினுக் கஞ்சித் துடிப்பார்சொல்? உண்மைமொழி பகர்வாய்
சகலருக் குஞ்சிற் சுகப்பேறு தன்னையினி தருள்வோர்
தறுகுபொற் குன்றக் குடிக்கோயி லுண்மருவு முருகா
அகவலுக் கின்புற் றெழிற்றோகை வன்னமுது கதன்மேல்
அயிலெடுத் தின்சொற் றமிழ்க்காவல் மன்னஅமர் பரனே.
23பதினொருசீர்ச் சந்த விருத்தம்✓
பரவைஇன் பக்குடிற் றாதன்
ஒருவனுஞ், சிற்றுறுப் போடு
பரியகும் பத்துதித் தோனும்—உற்ற தோர்வாழ்வு
அரமியங் கட்டிலிற் காதல்
விநயபுஞ் சத்திருப் போலும்
அரிவைஎன் கைக்குவப் பாகும்—எற்கும் ஈவாய்
உரமிகுந் துற்குணச் சூரன்
நடுநடுங் கப்பொலப் பூமி
உடையவன் துக்கம்விட் டோட—வெற்றி வேலால்
இரவினுஞ் சத்தமிட் டார்வ
மொடுபொருங் கைத்திறத் தோடும்
இணையில்குன் றக்குடிக் காவல்—பெற்று ளானே.
24வெண்பா-தவம்✓
பெற்றிடுவ தெல்லாம் பெறவேண்டிப் பேர்பெரிய
வெற்றிவே லேந்தும் விமலனையே-பற்றிநின்று
கோடாத குன்றக் குடித்தலத்தைப் போற்றுதலே
தாடாளர் செய்யும் தவம்.
25கட்டளைக் கலித்துறை✓
தவமே முயலினும், மங்கைநல் லார்மலர்த் தாளிறைஞ்சி
அவமே புரியினும், செவ்வேற் குமரன் அமர்தலினால்
நவமே மலிதருங் குன்றக் குடியில் நரர்கட்கெல்லாம்
சிவமேஎம் ஆருயிர் என்றுணர் ஆனந்தம் சித்திக்குமே.
26கலிநிலைத்துறை✓
சித்திக்கும் முத்திக்கும் ஆசித்து மாதவம் செய்வோர்களே!
எத்திக்கு மெச்சிடும் குன்றக் குடிக்குள் இருக்கின்றவேள்
சத்திக்கும் மயிலுக்கும் வாரணத் துக்கும் தமிழ்ப்பாடிடும்
பத்திக்குள் நிற்கின்ற கவுமா ரரைக்கண்டு பணிமின்களே.
27அறுசீர்க் கழிநெடில்✓
பணிலமுத்தம் திகழ்வீதி யுடையகுன்றக்
குடிக்குகனைப் பாடி ஆடித்
துணிவுதவும் சமரசச டாக்கரத்தைக்
குருபரன்வாய் சொல்லக் கேட்டுத்
தணிவறுஞ்சீர்ச் சண்முகத்வி னோதநன்னூல்
விதியுணர்ந்து தவஞ்செய் யாமல்
மணிமருவும் சுகசுப்பொற் கொங்கைநல்லார்க்(கு)
உருகுவ(து)என் மடமை! அன்றே.