குடிலிற் றினையைக் கிம்புரியார்
குறவர் மகளிர் சுணங்குமுலை
குலுங்கத் துவைக்கும் ஒலிகேட்டுக்
குரக்கின் இனங்கள் மழைமேகத்(து)
இடியென் றலமந்(து) உடுவிரவும்
எண்ணில் பசுங்காய்த் தலைப்புகுத்(து)
ஏறி விரியும் மலர்ப்பாளை
இடத்திற் பதுங்கிக் கிடந்(து)அதைவிட்டு
அடியிற் பழுத்து வெடித்தகனி
ஆரும் பலவிற் பாய்ந்து,சுளை
அனைத்தும் சிதறப் பெருந்தவர்தாம்
ஆவென் றிருவாய் அருந்திஅருட்
கொடியைப் புகழும் வளமைபுணர்
குன்றக் குடிவேள் வருகவே
குமர குருஎன் றுலகியம்பும்
குறிஞ்சிக் கிழவன் வருகவே.