முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
வேனிற்காலம்22 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

வேனிற்காலம்

93எண்சீர்க் கழிநெடில்✓
பெருகுதென்றற் றேரின்மத னுலவும் காலம்
பிறைக்கனல்மிக் கொளிர்காலம், பிறங்கும் பொன்னூர்த்
திருநதியில் தீம்புனலும் வறக்கும் காலம்
சீதரன்போய்ப் பாற்கடலிற் சேருங் காலம்
குருமணிக்கோ புரமருவு தெய்வக் கோவில்
குலவுகுன்றக் குடித்தலத்துக் கொற்ற வேந்தாம்
முருகனது கடம்பணிதோள் புணரா(து) இந்த
மொய்குழலாள் வாடுவது முறைமைத் தன்றே.
94நேரிசை வெண்பா✓
மைத்தடங்கண் ணீர்பெருக்கி வாள்வளையோ(டு) ஆரமெறிந்(து)
உய்த்தவற்றை யெல்லாம் உதவுமுந்நீர்—வைத்தலைவேற்
கோவாகிக் குன்றக் குடித்தலத்தில் வாழ்குகனை
மேவாத மங்கையொப்பா மே.