முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
சித்து13 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

சித்து

63எண்சீர்க் கழிநெடில்✓
வேளப்பா ஆனவன்போல் வளர்வ தாகி
விளங்குகுன்றக் குடித்தலைவாழ் வேற்கைச் சித்தன்
ஆளப்பார் புகழ்வலிமை பெற்றேம்; என்றும்
அழியேம்யாம்; அவன்ஆணை அவத்த மல்ல
கேளப்பா சித்திரக் குழம்பும் சோறும்
கிருதகுள பாயசத்தோ டிந்தா யாகில்
மீளப்பார்த் திருக்கரசு வாதம் செய்வோம்
வினைதவிர்ப்போம் பணியணியல் மேவு வோமே.