செய்ய வான்கலைச் சிறப்பும், சீர்பெறு
மெய்யெலாம் புனையும் வெண்ணீற் றொளியும்
ஒண்கோ வணத்தோ(டு) உடஇய கீளும்,
வண்கோ கனக மலர்முகம் ஒன்றும்,
மூண்டிதச் சிரமும், மூவிரு முகத்துக்
கண்டிகை யதனொடு காவியந் தொடையல்
புனைதரு கழுத்தும் புகலரும் பொருளை
நினைதல் மேய நெடிதகல் மார்பும்,
தண்டமுந் துகள்தீர் தனிவேற் படையும்,
கொண்டகை இரண்டும், குலவும் பாதுகைத்
தாட்டுணை மலரும், தயங்கும் பேரொளி
கூட்டுற வமைந்து குலவிரு பரிதிநேர்,
குண்டலக் காதும், கோணல்தீர் சடையும்,
மண்டல மூன்றா மலர்விழி வனப்பும்,
குமுதவா யிடத்துக் குறுநகைப்பொலிவும்,
அழுதவாய் துடிட்டி அகல்செவி விசிறித்
தானம் ஊற்றும் தவளமால் வரைநேர்
ஞானவே ழத்தின் நலம்புனை பிடரியில்
திகழ்தரு மாண்பும், செறிதரத் தோன்றி
புகழெலாங் கொடுத்துப் பொருநையில் திருமலைக்
குவட்டிற் காத்தமை கூறி, உய்யும்
தவத்தைஇவ் வுலகோர் தமக்கும்சந் தருளி
வீரவா கென்னும் விறலுடைப் புனிதன்
வாரமிக் குரைத்த வாழ்வுறப் புரிவாய்
யானைத் தோல்போர்த் திடுவோன் முதலாம்
ஏனைத் தேவர்கள் யாவரும் இறைஞ்சும்
குன்றக் குடித்திருக் கோவில்
மன்றத் துறையும் வடிவேற் சேயே.