முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
கிள்ளைவிடு தூது12 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

கிள்ளைவிடு தூது

60கட்டளைக் கலித்துறை✓
குடிகாரப் பாணர்தம் மால்வச மாம்விலைக் கோதையரோ(டு)
அடியாரைத் தேர்வது நீத்தங்கும் நீர்வர லாகுமென்று
கடிகாலும் பூம்பொழிற் குன்றக் குடிக்குகன் கண்முற்சென்று
பொடியாடும் கைக்கிளிக்(கு) உன்னாவல் மீறப் புகல்கிள்ளையே.
61வெண்செந்துறை✓
கிள்ளைப் பனுவல் கிளர்குன் றக்குடிப்
பிள்ளைப் பெருமான் பெருகருட் சுடரே.
62அறுசீர்க் கழிநெடில்✓
அருட்கடலிற் குளிப்பதற்கு முயலாமற்
பொருள்விரும்பி அலையுந் தம்மைத்
தெருட்புலமை யுடையாரா மதிப்பவரோ(டு)
இணங்காமல் திருக்கண் பார்த்(து)ஆள்
மருட்சிதரும் விழியணங்கார் தமக்குமனம்
உருகாத வலியுள் ளார்தம்
இருட்பிணிதீர்த் துயர்குன்றக் குடித்தலத்துக்
கோவிலிடத் திலங்கும் வேளே.