முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
சந்தக்கவி8 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

சந்தக்கவி

54கலிநிலைத்துறை✓
கதைகொண்ட சமன்வந்து பொருமுன்பு மலர்கின்ற கஞ்சக்கழல்
இதயங்கொ டுனைநம்பும் நிலைதந்து சுகமிஞ்சும் இன்புய்த்திடாய்
குதையொன்று சிலையங்கை யினர்நின்று புகழ்கின்ற குன்றக்குடி
அதைஎன்றும் அரசென்க அயிலுங்கொ டமரும்பொன் அந்தத்தனே.
55வேற்றொலி வெண்டுறை✓
அந்தமுதற் பகருமொரு மூன்றிடத்துந்
தானாகி அயில்வேல் ஏந்திப்
பந்தமற்றோர் காணநிற்கும் குகனுறும்குன்
றக்குடியைப் பரவ வல்லார்
செந்தகைத் திருவும்வெண் திருவுந் தோய்தரு
சுந்தரத் தோள்கொடு துலங்கு வார்களே.