முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
ஊசல்18 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

ஊசல்

81எண்சீர்✓
உண்மையொடு தவம்இரண்டும் தூண்க ளாக
உரையிறந்த நாதாந்தம் விட்ட மாக
வண்மையிகும் நான்மறையும் கயிற தாக
வழுத்தரிய பிரணவமே பலகை யாகக்
கண்மையுறும் இருமடவார் அருகில் மேவக்
கதிர்வேல்கொண்(டு) ஆறெழுத்தும் களிப்புற் றாட்ட
அண்மைநின்று பலர்போற்ற ஆடீர் ஊசல்
அணிகொள்குன்றக் குடிக்குகவேள்! ஆடீர் ஊசல்.
82எண்சீர்ச் சந்தக்கவி✓
ஊசல் ஒத்தலையும் நெஞ்சைப் பிடித்துன் அருளால்
ஓவி யச்சுடரில் உன்பொற் பதத்தி னிடையே
நாசம் அற்றுவளர் இன்பக் களிப்பின் மிகையால்
நானி னுத்திடுவ தென்(று)?இக் கணத்தில் மொழிவாய்
ஈச னுக்குமக வென்றுற் றிமைப்பி லவர்கோன்
ஈனும் உத்தமனு டன்சிற் சிலர்க்கு மனநோய்
ஆச ளித்தவரை வென்றிட் டசத்தி யுடனே
ஆண்மை முற்றவளர் குன்றக் குடிக்கு மரனே.