முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
மடக்கு6 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

மடக்கு

49கட்டளைக் கலிப்பா✓
நீறு போர்த்த கவுமார னாகமா நீறு போர்த்த கவுமார னாகமா
மீறு பாயலு றுப்பானை யன்றமை மீறு பாயலு றுப்பானை யன்றமை
வீறு தோய்ந்த வடிவேலன் பண்ணவர் வீறு தோய்ந்த வடிவேலன் பண்ணவர்
கூறு குன்றக் குடிக்கோவி லாதியே கூறு குன்றக் குடிக்கோவி லாதியே.
50எண்சீர்த் தாழிசை✓
ஆதிக்கொரு பொருளானதை அறியப்பகர் முருகோன்
அணிமேவிய குன்றக்குடி அமலன்புகழ் கோடி
நீதிச்சதுர் மறையாலும்நி கழ்த்தாதவை நிற்க
நிறைகல்விய துடையோமென நினையுஞ்சில மூடர்
பாதிக்கலை மதிவாணுதல் மடவாரையும், மனிதப்
பதராமவர் தமையும்புகழ் பற்றிலிடல் என்னோ?
சோதிக்கதிர் வேலேதுணை எனஓதிடும் நாவில்
தொலையாநடம் இடுதாளுறு சொற்சுந்தர மாதே.