முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
தழை15 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

தழை

67கட்டளைக் கலித்துறை✓
குக்குடந் தாங்குகைச் செவ்வேலன் குன்றக் குடித்தலத்தான்
குக்குடந் தான்விண்ணு ளார்தருப் பூந்தழை கோதைநல்லாட்
குக்குடந் தானெனும் கொங்கைகள் மீறின, கூர்ப்பிலர்வாழ்க்
குக்குடந் தாள்சுவைத் தீம்புக ழாகிக் குளிர்ந்தனவே.
68கொச்சகக்கலிப்பா✓
தனங்கிடக்கு மார்பகத்தார் தமக்குருகிப் பொருள்தேடும்
மனங்கிடக்குந் தூயவர்பால் வருந்திஇரந் தலையேனால்
முனங்கிடக்கு மூவினையும் முறுக்கியெனைப் புரந்தருள்வாய்
கனங்கிடக்கப் பொழில்சூழும் கவின்குன்றக் குடிப்பரனே.
69அறுசீர் விருத்தம்✓
பரந்தவான் கலையுணர்ந்த பாவலவர்
பனுவலையும் பழைக்குந் தீயர்
உரந்தவா(து) உயர்வதுகண்(டு) அலமந்தேன்
திருவருள்சற் றுதவி ஆள்வாய்
கிரந்தவாச் சியமறையும் தமிழ்த்துதியும்
முறைமுறையே கிளத்து வோர்க்குச்
சுரந்தஆ ரமு்தருத்தும் தாயெனக்குன்
றக்குடியிற் றுலங்கும் சேயே.