முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
சந்தம்10 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

சந்தம்

57பத்துசீர் விருத்தம்✓
நின்ற தாவரத் தைப்,புன் சொற்பகர் கிள்ளையை,
நெஞ்சை, ஓதிமத் தைக்,கஞ் சத்துறு புள்ளினை,
நன்ற தாகநத் திக்கொஞ் சக்கவி சொல்பவர்
நந்து றாவுன்வெற் றிச்சந் தத்தமிழ் கொள்வர்கொல்?
என்ற தேயெனப் பொங்கும் பப்புன லுள்வரும்
எங்கள் காவலற் குத்தந் திட்டதொர் எல்லையின்
ஒன்ற ஈகெனச் செப்புஞ் சத்திய வல்லவர்
உய்ந்து வாழ்வனப் புக்குன் றக்குடி ஐயனே.