முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
இரங்கல்11 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

இரங்கல்

58கட்டுத்தாழிசை✓
ஐய மற்ற மெய்யரே செய்கை யிற்ற துய்யரே
அருள்மி குந்த நேயரே பொருள்வி ரும்பும் வாயரே
மைய மொன்றும் யோகரே பொய்ய கன்ற நாகரே
மாதி ரத்து வாழ்நரே ஆதி வத்து வீழ்நரே
செய்ய குன்றக் குடியிலே வைகு மன்சிற் றடியிலே
சேர்ந்த சிந்தை மீளுமோ? ஆர்ந்த இன்பம் நீளுமோ?
வையம் நிந்தை கூறுமோ? மெய்ய றிந்து தேறுமோ?
மாய்வ(து) அஞ்சல் மேவியே ஆய்வ தென்றன் ஆவியே.
59பாண்-நேரிசை வெண்பா✓
தலைவன் பிரிவுபற்றி ஊடல்கொண்ட தலைவியிடம் தூதுவந்தபாணனை மறுத்தல்(இங்கு தலைவன் முருகப்பெருமான்)
ஆவித் துணையாகும் ஆறிரண்டு தோட்குகன்மேல்
கோவித்துக் கொள்வதற்கும் கூறினையோ—சேவித்து
மாதறுசீர் மாமுகன்மேல் வைஎன்ற பாணாபோ
கோதறுசீர்க் குன்றக் குடிக்கு.