முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
பனிக்காலம் - தலைவி கூற்று23 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

பனிக்காலம் - தலைவி கூற்று

95கட்டளைக் கலித்துறை✓
மேதகு சீர்கொண்ட நந்திசொல் நூலும் வியந்துபெருங்
காதலுற் றோர்க்(கு)இது நற்கால மென்று கழறப்பெற்ற
சீதள மீறும் பனிக்காலம் தோற்றியும் சேர்ந்திலனே
மாதவர் போற்றிடும் குன்றக் குடியினில் வாழ்கந்தனே.
96அறுசீர் விருத்தம்✓
கந்தனே வடிவே லேந்தும் கடவுளே உமையாள் ஈன்ற
மைந்தனே எனையாட் கொண்ட வரதனே நீபக்
கொந்தனே இணைதீர் குன்றக் குடித்தலத் தமரும் கோவே
மந்தனே முதலி னோரால் வருந்திடா தருள்செய் வாயே.