முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
கார்காலம்25 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

கார்காலம்

98கொச்சகக் கலிப்பா✓
ஊர்மருவும் நிலங்குளிர உறையுதவி உரும்ஒலியைக்
கார்மருவு காலம்வந்தும் கலந்தணைய வந்திலனே
கூர்மருவு வேலேந்திக் குலவுகுன்றக் குடிக்கிரிமேற்
சீர்சருவு கருணைபொழி செழுமுகில்போன் றிருந்தோனே.
99எழுசீர் விருத்தம்✓
இருவினைப் பிணிகெட் டருந்தவம் புரியார்
இலக்கெனத் துணிந்(து)அவர் மனம்போற்
கருநிறம் பொருந்தும் கவிசில பிதற்றிக்
கடையரிற் கடையனாத் திரியா(து)
அருமறைச் சிரத்திற் கொடிபுரி திருத்தாள்
அனையசெந் தமிழ்க்கவி முழக்கும்
குருவெனத் தடுத்தாண் டருளுவோன் குன்றக்
குடித்தலத் தமர்ஒரு கோவே.
100நிலைமண்டில ஆசிரியப்பா✓
அமரர்தம் கூட்டத்(து) அதிபனும் உணராச்
சமரச போதத் தன்மை யாதிய
நலமெலாம் கொடுத்து, நானிலத்(து) ஆழி
வலன்உறு புகழும் வளமதத் தழியாச்
செக்கர் போலும் சிவபிரான் சிறப்பும்
மிக்கவாக் களித்து விளங்கும்ஓர் மருந்து
கனந்தவழ் சோலைக் கவின்உற உடஇ
நனந்தலை இணைதீர் நாக மொன்று
கொடுதிகழ் குன்றக் குடியிற் கொற்றவன்
தொடுகுறி உணர்த்தச் சுகாசுகங் கடவா
வண்டர்தம் சேர்க்கையில் மருவாத்
தொண்டர்தம் பாதம் துலக்கும்தன் நீரே.
நூற்பயன் — வெண்பா✓
குன்றக் குடியர்க் குகவேல் கலம்பகத்தை
மன்றக் குடியான் மலயத்தான்—என்றக்
குடிலை யடையாளம் கொண்டவர்கேட் டவார்
குடிலை யடை யாத கொடை.