குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
மேகவிடு தூது4 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்
மேகவிடு தூது
28எழுசீர்✓
அன்று நான்முகன் படைத்திடும் உயிர்த்தொகை
அனைத்தையும் அனையே போல்
நின்று காக்கும்நல் எழிலிகாள்! உமைத்தினம்
நினைகுவ தொழியே னால்
குன்று றாவளம் உடையகுன் றக்குடிக்
குமரவே ளிடத்தே நீர்
சென்று நான்படும் துயரெலாம் மொழிந்தருள்
செய்கெனப் பணிவீ ரே.
29எண்சீர்த் தாழிசை✓
வீரைப் புனலைக் குடித்து விடுக்கவும்
விண்ணவர் ஊரிற் புகுந்து திரும்பவும்
பாரைப் புரப்பவர் தம்மை வணக்கவும்
பாடிய வாறு பலித்திடக் காணவும்
போரைப் புரக்கு மிலேச்சரை வெல்லவும்
பொன்னெனச் செம்பு பொலிந்திடக் காட்டவும்
கூரப் பொருந்(து)அயில் நாடித் தெளியவும்
குன்றக் குடியிற் குகனருள் செய்ததே.
30வஞ்சித்துறை-இருசீர்✓
செய்யகுன் றக்குடி-ஐயனன்(பு) உற்றிடில்
மையல்நெஞ் சற்றுயர்-மெய்யறம் சிக்குமே.
31எண்சீர்க் கழிநெடில்✓
கைக்கிளை-தலைவன்றன்மை
சிக்கமில கிடவெளிறு சூழ்ந்த மைக்கண்
சிறிதுசிவப் புறத்தோகை விரித்துக் கூவித்
தக்கநடம் ஆடும்மயிற் பரியி லேறும்
சரவணவேள் மருவுகுன்றக் குடியின் மானாள்
கைக்கமலத் தணியும்வளை ஒன்றோ டொன்று
கலகலெனப் பேசும்ஒலி காதிற் கேட்டால்
இக்கன்வந்து பொருகின்றான், பவள வாய்ச்சொல்
இசைகேட்டால் என்படுமோ இதயம், மாதோ.
32பதினான்குசீர்த் தாழிசை-நகர்ச்சிறப்பு✓
மாதர்கள் ஆடலின் ஓதையும், வேதியர்
மறையோ திடும்ஓலியும்,
வளர்தமிழ் நாவலர் துதியும் தேவர்கள்
மகுடம்உ ரிஞ்சுசதலும்,
பூதர்கள் நாயகர் ஆதியர் தம்குறை
புகல்வதும், உயர்வேழம்
பொங்கும் தங்கொடு பிளிறலும், மயிலும்
பூவையும் அஞ்சுகமும்,
சாதக மும்,பினும் உள்ளன வும்பயில்
சத்தமும், இடிநாணத்
தகுமும், முரசொடு விழவின் முழக்கும்
சலதிஅ டங்கிடினும்
சீதம ணங்கமழ் நறுமலர் பெருகச்
செறிபொழி லிடைமீறும்
திருவளர் குன்றக் குடிமுரு கனையே
சிந்திப் பதுநன்றே.
33நேரிசை வெண்பா✓
நன்றுதவும் நின்பெருமை நாகர்பிரான் ஓதரிய(து)
என்றுணர்ந்து வாழ்வோர்க் கிழுக்குண்டோ—குன்றுள்உயர்
கோலா கலம்பொருந்தும் குன்றக் குடியினர்க்காக்
காலாக லம்பொருந்துங் கா.
34கட்டளைக் கலித்துறை. திரிபு✓
காவியங் கண்ணினர்க்(கு) உள்ளுரு காதுனைக் கந்த! என்று
கூவியங் கண்ணி னலங்காட்டுங் குன்றக் குடித்தலத்தைச்
சேவியங் கண்ணி னடற்கண்ணல் வேளைச் செகுத்(து) இதணின்
ஓவியங் கண்ணின தாறெழுத் தோதல் உறுவதென்றே.
35அம்மானை✓
என்றற்(கு) அனைமுதலாம் ஈரிரண்டு தாயகமும்
குன்றக் குடியிற் குருபரனே அம்மானை
குன்றக் குடியிற் குருபரனே ஆமாகின்
மன்றத்து முந்தவருள் வைக்குமோ அம்மானை
மாதனத்தைத் தந்துமன்றோ வாழ்விக்கும் அம்மானை.
36அறுசீர் விருத்தம்✓
மானிடம் பெற்று ளார்க்கு வகுத்தநூற் பொருள்ஓர் நான்கும்
வானிடம் புரப்போர் நாண வலிதெமக் கருள்வான் கண்டீர்
ஆனிடத்(து) இமயப் பாவை அருகுறப் பெரியோர் காணும்
கோனிடத் துதித்துக் குன்றக் குடித்தலத் தவிரும் கோவே.
37வஞ்சி விருத்தம் முச்சீர்✓
கோலமிகு குன்றக் குடி-வேலனது வெணகுக் குடம்
ஓலமிட உம்பர்த் தலம்-ஞாலமொடு நன்றுற் றதே.
38கட்டளைக் கலிப்பா✓
உற்ற வர்க்கும் உறவோர்க்கும் தன்உயிர்
ஒன்று மேதுணை என்றெண்ணி, உண்மைநூல்
கற்ற வர்க்குந் தவத்தோர்க்கும் சேர்ந்திடாக்
காசு தேடிக் கலங்கிட லாகுமோ
பெற்ற வற்கும் குறுமா முனிக்கும்ஓர்
பிரண வப்பொருள் பேசிய தேசிகா!
கொற்ற வர்க்கும் துணைபான வேலவா
குலவு குன்றக் குடிக்கோவிற் கூத்தனே.
39இன்னிசை வெண்பா✓
கூத்தன் பரவவளர் குன்றக் குடிக்குகனே
காத்தருள வல்ல கடவுளெனக் கண்டிறைஞ்சிப்
பூத்தமலர் கொண்(டு)அவன்றன் போர்வேலைப் பூசைபுரிந்(து)
ஏத்தவல்லார் தம்மடிமை யாம்.
40குறளடி வஞ்சிப்பா✓
யாமெமதெனும் தாமதர்தமை,
நாளுந்துதித் தாளுங்குரு
எனவேபணிந்(து) அனமேல்இவர்
விதிமதன்சமன் சதிதவிர்தவர்
போல்மகிழ்பவர் பால்மருவிலன் — அதனால்
வெள்ளியவரைபோல் விளங்குகுருக்காட்டித்
தெள்ளியமறையின் சிரப்பொருள்உணர்த்திக்
கோதறுதொண்டர் குழுவினில்கூட்டி
ஆதரவுடனுற் றருளவேண்டும்
குஞ்சரம்பிளிறக் குரக்கினம்புயலென்(று)
அஞ்சல்உறீஇ அலமரும்பொழில்சூழ்
குன்றக்குடியிற் குலவுசிற்பரனே.
41கலிவிருத்தம்✓
பரவு வார்க்கிரு பங்கயத் தாளருள்
குரவ னே!எழிற் குன்றக் குடிக்குள்வாழ்
சரவ ணோற்பவ னேஉனைச் சார்ந்துமயான்
கரவு கொண்டு கலங்குவ தென்கொலோ.
42கொச்சகம்✓
என்கணவிற் பலகால்வந் தியம்பியசொற் சோராமே
கொன்கலபச் சிகியாய குரகதத்தில் வந்தருள்வாய்
வன்கணர்க்கும் திருவருளே வழங்குகுன்றக் குடிக்கிரிமேல்
மின்கலுழ்வேற் படையேந்தி விளங்குகுகப் பெருமானே.
43மடக்கு-கொச்சகம்✓
பெருகுகுன்றக் குடிக்கோவில் பேணுவார் குடிக்கோவில்
பருமலர்ச்செந் திருவருளும் பரவுநர்க்குத் திருவருளும்
தருமடியார்க குயிராகும் தவம்புரிவோர்க் குயிராகும்
பொருபிறவுந் துரந்தரனே பொருந்துமயிற் றுரந்தரனே.
44களி-பதினான்குசீர்✓
துரந்து சூரனை வென்று மீண்டருள் சுத்த ஞானதி வாகரன்
தூய குன்றக் குடிக்குள் மேவிய சுந்த ரக்குகன் அன்பினால்
கரந்தி டா(து)அருட் கள்ளை யுண்டு களித்து ளேம்,ஒரு காலமும்
கால னுக்கயர் கின்றி லேம்இது கண்டு பாடுமின் கவிஞர்காள்!
இரந்து சுற்றம்வ ளர்க்க வேண்டி இராவ ணன்திறல் வாலியை
எய்து கொன்றதும், வீமன் வானரம் யாவும் உயர்ந்திட வந்ததும்
நிரந்த ரம்புகழ் பெற்ற மாருதி நிகரில் வான்மலர் கொண்டதும்
நீதி சேர்தரு மன்கை ஏற்றதும் நித்த மும்சொலல் நிற்கவே.
45நேரிசை வெண்பா✓
நிற்கும் நிலையுணர்த்தி நேரிழையார் வாடிரைக்கும்
சொற்குருகு மோகம் தொலைத்தாண்டு—நற்குணமே
துன்றக் குடிலையினிற் றோய்பொருளைக் காட்டவல்லான்
குன்றக் குடிவளரும் கோன்.
46கட்டளைக் கலித்துறை✓
கோனாகி உண்மைக் குருவாகி யார்க்கும் குலதெய்வமாய்
நானாகி நின்றதும் தானாகித் தீயவர் நாடரிய
வானாகி ஒப்பறுங் குன்றக் குடியில் வளருமலைத்
தேனாகித் தித்திக்கும் செவ்வேள்பொற் றாள்களிற் சேர்வதுண்டே.
47எண்சீர்த் தாழிசை✓
உண்டுண் டுதுயின் றெழும்ஊ ரவருக்(கு)
உறவா கியுழன் று,முயன் றுபொருட்
கொண்(டு)உண் கண்மடந் தையருக் கருள்வோர்
குன்றக் குடியிற் குறுகப் பெறினும்
வண்டுண் டகடம் பணியும் புயவேள்
மறலிக் கு(ம்)மதப் பயலுக் கும்வெறும்
புண்டுண் றுதலைப் பிரமற் கு(ம்)மனம்
புலரப் பொருமற் புகழைத் தருமே.