முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
சம்பிரதம்21 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

சம்பிரதம்

89அறுசீர்க் கழிநெடில்✓
ஓர்கரத்தில் எழுகடலை அடக்குவேள்
இரதம்உண்பேன் உயர்ந்த நாகத்
தார்களிப்புற் றணிகுவேன், இவையெல்லாம்
வித்தையென்று தரணி சொன்னால்
கூர்கதிக்கும் தனிவேற்கைப் பெருமானை
இணையில்குன்றக் குடியிற் கண்டு
சூர்களத்திற் படப்பொருத விளையாட்டைத்
தமிழ்க்கவியாற் றுதிசெய் வேனே.
90அறுசீர்✓
செய்ய பூமகள் மருவுகுன் றக்குடிச்
சிவகுரு நாதன்றான்
வெய்ய சூர்முதல் தடிந்தில னாமெனில்
விளங்குமுத் தொழிலெங்கே?
ஐய ராமவர் வாழ்க்கையெங் கே?மறை
அந்தணர் மகம்எங்கே?
மெய்ய தாமென அவரவர் விரும்புந்நூல்
விதிகள்எங் கேபோமே.
91கலிவிருத்தம்✓
போம தாசலப் புங்கவன் பின்வரு
கோம ளாரகக் குன்றக் குடிக்குகன்
தாம மாலையும் தண்டமிழ் மாலையும்
காம நோயைக் கவலையை நீக்குமே.
92கொச்சகக் கலிப்பா✓
நீக்கரிதாம் இருவினையும் நீறுபடப் பன்னீரின்
ஆக்கமிகும் பச்சிலையில் அமைத்தவெண்ணீ றளித்தருள்வாய்!
சேக்கனகக் கிரிநாணத் திகழ்ந்தகுன்றக் குடிக்கிரிமேல்
ஊக்கமிகுந் தனிவேல்கொண் டொளிர்குமரப் பெருமானே.