முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
வண்டு விடுதூது7 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

வண்டு விடுதூது

51சவலை வெண்பா✓
மாதரெல்லாம் என்னை மதிக்கஇன்னே வண்டினங்காள்!
கோதறு சீர்க்குன் றக்குடிக் குகன்பால்
ஆதரவோ டென்துயரம் அத்தனையும் சொல்லிஅவன்
சீதமலர் ஈயச் செயும்.
52கட்டளைக் கலித்துறை✓
செய்யவள் போற்றும்நம் குன்றக் குடியிற் சிவகுருவாம்
மெய்யனைச் சண்முகத் பெம்மானைச் செங்கதிர் வேலவனை
ஐயமு றாத மனத்தாற் கருதும் அடியவர்மேல்
எய்யவும் வல்லவ னோ?மல ரோனுக்(கு) இளையவனே.
53கலி விருத்தம்✓
இளமை நீங்குருங் குமரனைக் கனல்விழி இலங்கும்
குளம்ஓ ராறுடைக் குரவனைக் குளிர்புனற் பணைசூழ்
வளமை மேவுகுன் றக்குடிப் புலவனை வழுத்தார்
களவு றாமனம் பெறுவது கதையினுங் கதையே.