முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
மதங்கம்16 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

மதங்கம்

70கலிவிருத்தம்✓
சேய மாமுகம் ஆறுடைச் சிவனெனத் திகழும்
தூய வேலனை இலங்குகுன் றக்குடித் துரைஎன்(று)
ஏய நாடொறும் இசையொடு துதிக்கும்இம் மதங்கி
மாய வாள்விழிக் கணைதொடிற் பிழைப்ப(து)யார் மன்னோ.
71அறுசீர்✓
மன்னுமா முகங்கள் ஆறும் மலர்விழித் தொகைமூ ஆறும்
மின்னுசெந் துவர்வாய் ஆறும் வியன்குழைச் செவியீ ராறும்
பன்னுமற் றுளவும் தோகைப் பரிமிசை குலவத் தோன்றிக்
கொன்னுறு பொழில்சூழ் குன்றக் குடிக்குசுகன் ஆள்வ தென்றே.
72வெண்டளைக் கலிப்பா✓
என்றும் அழிவற் றிருக்கும் பெரும்பேறு
குன்றுஞுயர் குன்றக் குடிக்குகவேள் ஈயினல்லால்
துன்று புலனடக்கித் தூயநிலை சேர்துமெனப்
பொன்றுமட்டும் நாடிப் புலர்ந்திடினும் வாராதே.