முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
தன்னிலை கூறல்20 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

தன்னிலை கூறல்

84பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
கிழவனுரு வங்கொண்டு மறமக ளிடத்துறும்
கிருபா கரக்கொண் டலைக்
கிள்ளையங் கவிபுனையும் வள்ளலைப் பிரமனது
கெருவநோய் அறஇ டித்துக்
கழகப் பெருந்தலைவ னானகுரு நாதனைக்
கரியமாற்(கு) ஆழி தந்த
கையா(று)இ ரண்டுடைய கடவுளைச் சிவபிரான்
காதிடத் தொருசொல் ஓதும்
மழலையங் கனிவாய்கள் ஆறுடைய முருகோனை
மலயமா முனிவன் நெஞ்ச
மலரிடத் தறுதினம் நடம்புரியும் இருசரண
வாரிசக் குகனை, வண்டு
குழலிசை முழக்கவளர் குன்றக் குடிக்குள்வளர்
கொற்றவே லனைவி ரும்பிக்
கும்பிட்டு நாடித் துதித்துருகும் அடியவர்
குழத்தினுக்(கு) அடிமை நானே.
85நேரிசை வெண்பா✓
யானெனெதென் றோதும இருண்டும்பேரய், யாவையும்நீ
தானெனக்காண் போர்க்கும் தவறுண்டோ-மீனெனக்கண்
கொண்டார்கள் ஆடல்மிகும் குன்றக் குடியில்நிற்கும்
தண்டாயு தக்குருநா தா.
86கட்டளைக் கலித்துறை✓
தாதாரும், பூம்பொழிற் குன்றக் குடியிற் சரவணன்றன்
பாதார விந்தத்தை நம்பாத மூடரைப் பாடுகின்ற
தீதாளர் தம்மையும் ஓர்பொரு ளாகச் சிறிதுமெண்ணி
வாதாட லாகுங்கொ லோகவு மாரத்து மாதவரே.
87கலிநிலைத்துறை✓
மாதவஞ் செய,நல்ல துறவுற்றும் நடமாடும் மயில்போல்வரும்
சீதசந் திரவதன மடவார் தமைச்சிந்தை செய்வேனைஆள்!
வேதமந் திரபுனித ஆகமவி னோதத்து மேலோர்குலம்
கோதுறுங் கிளியொடு துதிக்கின்ற குன்றக் குடித்தெய்வமே.
88கட்டளைக் கலிப்பா✓
தெய்வ மங்கையர் ஆடலும் பாடலும்
சேர்ந்த குன்றக் குடிக்கோவிற் சண்முகன்
ஐவ கைத்தொழிற் செய்வோர்க்கும் நாயகன்
ஆகு மென்ப தறியாத மாந்தரே
பெய்வ ளைக்கரத் தார்தமக் காட்படும்
பித்த ராகிப் பிறப்பிறப் பென்பதால்
நைவ ரென்று பெரியோர்கள் கூறிட
நாம றிந்தனம் நாட்டிழுள் ளோர்களே.