முருகன் App
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
அறுவடை செய்தல்54 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3அவையடக்கம்4மூத்த பள்ளி வரவு5இளைய பள்ளி வரவு6பள்ளன் வரவு7பள்ளன் தன் பெருமை கூறுதல்8பள்ளியர் குடிப்பிறப்புக் கூறுதல்9நாட்டு வளம்10குயில்11பள்ளியர் கும்மி யடித்தல்12தெய்வம் போற்றுதல்13மழைக் குறி14பள்ளர் திரண்டு வருதல்15மழை வெள்ள வரவு16ஐந்திணை - குறிஞ்சி17பாலை18முல்லை19மருதம்20நெய்தல்21ஆற்று வெள்ளம்22மீன் வகை23பொருள் வகை24பண்ணைக்காரன் வரவு25பள்ளர் வணங்குதல்26பண்ணைக்காரன் செயல்27பண்ணைக்காரன் கூறுதல்28மூத்தபள்ளி முறையிடுதல்29இளைய பள்ளியைக் கேட்டல்30அவள் கூறுதல்31பள்ளி கூறுதல்32பண்ணைக்காரன் கோபித்தல்33பள்ளன் வெளிவருதல்34பள்ளன் கூறுதல்35பண்ணைக்காரன் எண்ணுதல்36பள்ளனைத் குட்டையிலடித்தல்37பள்ளன் கூறுதல்38இளைய பள்ளி வருதல்39பள்ளனைக் கண்டு வருந்தல்40பள்ளன் ஆறுதல் கூறுதல்41மூத்த பள்ளி வருந்திக் கூறுதல்42சோறு தருதல்43பள்ளன் கூறுதல்44மூத்த பள்ளி பண்ணைக்காரனை வேண்டல்45பள்ளனை விடுவித்தல்46பள்ளன் கூறுதல்47நாள் பார்த்தல்48நற்சகுனமாதல்49பள்ளர் நாற்றுப் பாவச் செல்லுதல்50நாற்று வளர்தல்51நாற்று பறித்தல்52நடுகை53பயிர் விளைதல்54அறுவடை செய்தல்55மூத்த பள்ளி சண்டையிடல்56பள்ளியர் ஏசல்57வாழ்த்து
திருமலை முருகன் பள்ளு · பெரியவன் கவிராயர்

அறுவடை செய்தல்

157சிந்து✓
செந்நெல் விளைந்த செய்தி பண்ணையான்
முன்ன முரைத் திட்ட
திருமலைப் பள்ளன் நாட்கதிர் கொண்டு
சிரத்துச் சுமந்து போயினான்
அன்ன மென்னடை வள்ளி நாயகன்
திரு மலைவாழ் முத்
தையன் சன்னிதிநின்
றனைவருங் கும்பிட்டே
இன்னம் பலம்பெற வயலில் மீண்டுபோய்க்
கூனி ரும்பு கை
எடுத்துக் கதிர்கொய் தரிகள் பரப்பித்
தொடுத்துச் சுமை யாய்
மன்னுங் களத்திற் கொணர்ந்து போர்வைத்தே
மற்றை நாள் அந்த
வளமைப் போரைச் சரித்துப் பகட்டின்
பிணையல் பிணைக்கின்றார்.
158✓
பூட்டும் பிணையல்கள் பிடித்துவைச் கோல்களைந்(து)
ஒருமுகப் படப்
பொலியைக் கூட்டி முறத்தி னாற்பதர்
போக வீசியே
கோட்டைங் கரனை முனம்வைத்தே குடும்பன்
பாட்டக் கால்கொண்டு
குடங்கை கட்டி யளந்தம் பாரமாய்க்
குவித்துக் குறியிட்டார்
ஈட்ட மாயுழு தான குடிகட்கே
குடிச்சு தந்த்ரமும்
ஈந்து பிள்ளையா ரடியும் பேறும்
இனிது கைக்கொண்டான்
சீட்டும் எழுதிப் போட்டு முத்தையன்
வருடப் பூசைக்குச்
சிறந்த ஆயிரத் திரட்டி நெல்வகை
சேரில் கட்டினானே.